new BB1

அக்கியை கண்டு அலற வேண்டாம்!

Loading...

ht3615கோடை காலத்தில் வெயிலின் கடுமையால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ‘அக்கி’ எனும் ஒரு வகை அலர்ஜி நோய் தாக்கி வருகிறது. இந்த அக்கி நோய் தாக்குவதற்கு பல காரணங்கள் உள்ளன.சுத்தமான உடை அணியாமல் இருப்பது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, வெளிப்புற தோலில் ஏற்படுகிற அழற்சி, உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளால் அக்கி நோய் வருகிறது.

இவ்வகை அக்கி தொற்றுநோய் கிருமிகள், மற்றவர்களையும் எளிதாகத் தாக்கும் தன்மை கொண்டது.அக்கி வருவதை தடுக்க:நாம் அனைவரும் நாள்தோறும் சுத்தமான நீரில் குளிக்க வேண்டும். அக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த நீரில் 5 சொட்டு டெட்டால் கிருமிநாசினி (அ) வேப்பிலையை அரைத்து, எலுமிச்சை அளவு நீரில் கலந்து குளிக்கலாம்.

அதேபோல். ஒவ்வொரு நாளும் சுத்தமான, சுகாதாரமான ஆடைகளை அணிய வேண்டும். முதல் நாள் அணிந்த ஆடைகளை மறுநாளும் அணியக்கூடாது. நன்கு துவைத்த உடைகளை வெயிலில் காயவைக்கும்போது, உள்புறத்தை வெளிப்புறமாக வைத்து காயவைக்கலாம். தேவைப்பட்டால், துணி அலசும் நீரில் வேப்பிலையை அரைத்து கலந்து கொள்ளலாம்.

உங்களுக்கு ஒவ்வாத உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. இதையும் மீறி தொடர்ந்து அக்கி காணப்பட்டால், உரிய முறையில் சித்த மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் எளிதாக அக்கியை குணப்படுத்தி விடலாம்.மருத்துவ சிகிச்சை:ஊமத்த இலையை அரைத்து, வெண்ணெயில் குழைத்து, அக்கி வந்துள்ள இடங்களில் பூசினால் விரைவில் குணமாகும். அதேபோல், கோவை இலையை அரைத்து, சிறிது வெண்ணெயையும் சேர்த்து பூசினாலும் குணமடையும்.

புது மண்சட்டியில் பூசுமஞ்சளை போட்டு சுட்டு, அதன் சாம்பலை வெண்ணெயில் குழைத்து அக்கியில் பூசினால் குணமாகும். அதேபோல், அக்கி வந்த இடத்தில் செம்மண்ணை (பூங்காவி) தண்ணீரில் குழைத்து பூசினாலும் பறந்தோடி விடும்.அக்கி கொப்புளங்கள் நீங்க:ஒருசிலரின் உடலில் வந்த அக்கிகள் ஆறாமல் கொப்புளங்களாக காணப்படும். அப்படி யாருக்கேனும் காணப்பட்டால், அவற்றின் மீது வன்னிமரத்து இலை (அ) ஊமத்தை இலையை தண்ணீர் விடாமல் அரைத்து, வெண்ணெயில் கலந்து 3 நாட்கள் தொடர்ந்து பூசிவந்தால் குணமாகும்.மான்கொம்பு பற்பத்தை 200 மி.கி அளவு எடுத்துக் கொண்டு, தினமும் 2 வேளை வெண்ணெய், நெய் (அ) பாலுடன் கலந்து சாப்பிட்டால், அக்கி விரைவில் குணமாகும்.

Loading...

728

2