new BB1

அதிகளவு மது குடிப்பதால் வரும் தலைவலியை போக்க!

Loading...

529ddf20-49ee-4c4a-bcff-015cc7554dd0_S_secvpf

மது அருந்துவது என்பது ஒரு இயல்பாகவே பல பேர் மத்தியில் ஆகிவிட்டது.

குடிப்பதனால் உங்களுக்கு குடியின் பின் விளைவான தலைபாரம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த தலைபாரமானது மிகவும் கடுமையாக இருந்தால், ஒரு நாள் வேலை முழுவதும் பாதிக்கப்பட்டு விடும்.

உடம்பு எந்தளவுக்கு மதுவை எடுக்க ஒத்துக்கொள்கிறதோ, அதன் படி இந்த தலைபாரமானது ஒரு நாளைக்கு அதிகமாகவும் கூட நீடிக்கலாம். இத்தகைய தலைபாரத்தை சரி செய்யும் பாட்டி வைத்தியங்களை பார்க்கலாம்.

• தலைபாரத்தை நீக்க சிறந்த வழி ஒரு கப் காபி அருந்துவது. ஒரே நேரத்தில் அதிகமாக பருகுவதை விட, நாள் முழுவதும் குறைந்த அளவில் சிறிது இடைவேளை விட்டு சூடாக குடிப்பது நல்லது. காப்ஃபைன், இரத்த அழுத்தத்தை கூட்டுவதால், உடலானது மதுவை வேகமாக வளர்சிதை மாற்றம் செய்ய உதவி செய்யும்.

• மாத்திரை வடிவில் உள்ள அமில நீக்கிகளை (Antacids)

சுலபமாக தண்ணீரில் கலந்து பருகலாம். இது தலைபாரத்தால் ஏற்பட்டுள்ள உடல் அயர்ச்சியை நீக்கும். பல அமில நீக்கிகளிலும் சோடியம்-பை-கார்போனேட் கலந்திருப்பதால், மதுவினால் ஏற்பட்டுள்ள அதிகப்படியான அசிடிட்டியை குறைக்க இது உதவும்.

•  அதிக அளவு எலெக்ட்ரோலைட்ஸ் உள்ள குளுக்கோஸை தண்ணீரில் கலந்து பொறுமையாக நாள் முழுவதும் குடித்தால் தலைபாரம் நீங்கும்.

• கடினமான உடற்பயிற்சிகளை செய்யாமல் த்ரெட் மில்லில் ஓடுவது, சிறிதளவு புஷ்-அப் எடுப்பது போன்ற லேசான உடற்பயிர்ச்சிகளை செய்யலாம். உடற்பயிற்ச்சியினால் ஏற்படும் வியர்வைக்கு பின், குறைந்த அளவு சர்க்கரை உள்ள ஊட்டச்சத்து பானத்தை பருகினால் தலைபாரம் நீங்கும்.

* இஞ்சி டீ தலைபாரத்தால் ஏற்படும் தலைவலியை நீக்கும். தலை குடைச்சலை குறைத்து, தலைபாரத்தை நீக்குவதை  நீக்கி அருந்திய மதுவினால் வயிற்றில் செரிமான பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.

• தலை பாரம் ஏற்படும் போது மோர் குடித்தால் போதை சற்று தெளியும்.

இந்த முறைகளை பின்பற்றி போதையால் ஏற்படும் தலைவலியை போக்கலாம்.

அதைவிட சிறந்த வழியும் ஒன்று உள்ளது. அது மது குடிக்காமல் இருப்பது.

Loading...

728

2