new BB1

அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா?

Loading...

ht3624‘‘உடற்பயிற்சி மட்டுமல்ல… எதுவுமே அளவு க்கு அதிகமாகும்போது ஆபத்துதான். ஆரோக்கியமான உடற்பயிற்சி என்பது ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை இருக்கலாம். மேலைநாடுகளில் 45 நிமிடங்களிலேயே உடற்பயிற்சியை முடித்துக் கொள்வார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறோமோ, அதற்கேற்ற உணவுமுறையையும் ஓய்வையும் பின்பற்றுவது அவசியம்.

ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்கள், சினிமாவில் கதாபாத்திரத்தின் தேவைக்காக உடலைக் கூட்டும் நடிகர்கள் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தாலும், அதற்கேற்ற உணவு மற்றும் ஓய்வையும் பின்பற்றுவார்கள். அலுவலகம் செல்கிறவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வதற்கான நேரம் குறைவாகவே கிடைக்கும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள அளவுக்குள் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் தகும்’’.

Loading...

728

2