new BB1

அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் பிளாக்பெரி!

Loading...

blackberry_001கைப்பேசி சந்தையில் சிறந்த வரவேற்பைப் பெற்ற ஒரு நிறுவனமாக பிளாக்பெரி விளங்குகின்றது.
இந்நிறுவனம் தான் வடிவமைக்கும் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு பிளாக்பெரி எனும் பிரத்தியேக இயங்குதளத்தினையும் வடிவமைத்து வழங்கி வந்தது.

ஆனால் முதன் முறையாக கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.

அன்ரோயிட் இயங்குதளம் தற்போது மிகவும் பிரபல்யமாகி வருகின்றமையே இதற்கு காரணமாகும்.

இக் கைப்பேசி வெளியீடு தொடர்பான தகவல் கடந்த வாரம் வெளியாகியிருந்த நிலையில் தற்போது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இக்கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

728

2