new BB1

அல்சர் வர காரணம் பாக்டீரியா!

Loading...

31-1377948912-7-ulcerஉணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறு குடலின் முன்பகுதி உட்சுவரில் தோன்றும் புண்களே குடல் புண் (அல்சர்) என்றழைக்கப்படுகிறது. பொதுவாக காரமான உணவு உட்கொள்வது, சரியாக உணவு உட்கொள்ளாதது, மன அழுத்தம் ஆகியவை தான் வயிற்று புண் வருவதற்கு காரணம் என்று பொதுவாக கூறப்படுகிறது. பெரும்பாலான வயிற்று புண் வருவதற்கு பாக்டீரியாவே காரணம் என்று மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உணவுக்குழாயின் உள்பகுதியை பாதுகாக்க சளிபோன்ற படலம் உள்ளது.

அமிலம் உணவுக்குழாயில் அதிகமாக படரும் போது, அது அந்த சளிப்படலத்தை பாதித்து புண்களை ஏற்படுத்திவிடுகிறது. தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, இரைப்பை மற்றும் சிறு குடலின் உள்சுவர்களை பாதித்து புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. உணவு மற்றும் தண்ணீர் வழியாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கு இந்த பாக்டீரியா பரவுகிறது. உணவு சமைக்கும்போதும், சாப்பிடும் போதும், கழிப்பறைக்கு சென்று திரும்பிய பிறகும் கண்டிப்பாக சோப் போட்டு கை கழுவ வேண்டும்.

உணவு மற்றும் தண்ணீர் குடிப்பவர் மட்டுமல்ல, அதை சமைப்பவர், பரிமாறுபவர் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தால் பாக்டீரியா மூலம் வரும் குடல் புண்ணை தவிர்க்கலாம். மது அருந்தும் பழக்கம் இரைப்பையின் உட்சுவரை பாதிக்கிறது. இரைப்பை அமிலங்கள் சுரப்பை அதிகரித்து குடல் புண்ணை ஏற்படுத்துகிறது. அதே போல் புகைப்பவராக இருந்தால் வயிற்று புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கும். எனவே மது அருந்துதல், புகை பிடித்தல், குளிர்பானங்கள் குடித்தலை தவிர்க்க வேண்டும்.

டாக்டர் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகளை எடுக்கக்கூடாது. மாத்திரை எடுத்துக்கொண்டே மது அருந்துவது வயிறு பாதிப்பு மற்றும் புண் ஏற்படுவதற்கான வாய்ப்பை பல மடங்கு அதிகரிக்கும். இதன் அறிகுறிகள், வயிறு பற்றி எரிவது போன்ற உணர்வு இருக்கும். புண் உள்ள இடத்தில் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் படும்போது தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும். இந்த வலி தொப்புள் முதல் எலும்பு வரை எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிறாக இருக்கும் நேரத்தில் வலி இன்னும் அதிகமாகும்.

இரவில் வலி மேலும் அதிகரிக்கும். சில நாட்களோ, சில வாரங்களோ வலி மறைந்து பிறகு மீண்டும் வெளிப்படும். வலி அதிகம் ஆகும்போது ரத்த வாந்தி வரலாம். அது, சிவப்பாகவோ, கருப்பாகவோ இருக்கலாம். மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறும். அல்லது மலம் கறுப்பு நிறத்தில் இருக்கும். வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்படும். உடல் எடை குறையும். பசியில் மாற்றம் ஏற்படும். இத்தகைய அறிகுறிகளில் எதாவது ஒன்று இருந்தாலும் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

Loading...

728

2