new BB1

ஆண்டிராயிட் டிவைசை / மொபைலை பாதுகாப்பானதாக பயன்படுத்த 10 வழிமுறைகள்!

Loading...

20015786ஆண்டிராயிட் என்பது பயன்படுத்த ஏதுவான மற்றும் மிகவும் பரவலான ஓ எஸ் என்பதால் இதிலிருந்து பிறரது தகவலை அவர்கள் அறியாவண்ணம் எடுப்பது மிக சுலபமான ஒன்றாகி விட்டது. ஆதலால் நமது டிவைசை பாதுகாப்பானதாக வைத்து கொள்வது முக்கியம்.
அதற்கான சில ஆலோசனைகள் பின்வருமாறு:
1. ஸ்க்ரீன் லாக் அமைப்பு
ஆண்டிராயிட் டிவைசை பாதுகாக்க, ஸ்க்ரீன் லாக் ஒரு எளிய முறை. மொபைல் 24மணி நேரமும் நமது கண்காணிப்பில் இருக்கும் என கூற முடியாது. அடுத்தவர் நமது மொபைலை எடுத்து கையாளுவதை தவர்க்க ஸ்க்ரீன் லாக் செய்வது முக்கியம்.
ஸ்க்ரீன் லாக் முறையில் பாஸ்வேர்ட், பேட்டர்ன் மூலம் ஸ்க்ரீனை லாக் செய்து கொள்ளலாம். பேட்டர்ன் மூலம் அன்லாக் செய்த பின்னர், தடம் தெரியாத வண்ணம் திரையை துடைத்து விட்டால், அந்த தடத்தை வைத்து பேட்டர்னை பிறர் அறிந்து கொள்வதை தடுக்க முடியும்.
2. உத்தரவாதமற்ற நெட்வொர்க்கில் சேர வேண்டாம்
ஸ்மார்ட்போன் மூலம் பிசினஸ் செய்பவர்கள், பண பரிவர்த்தனை செய்பவர்கள், ஓசியாக கிடைக்கிறதே என வெளி இடங்களில் உள்ள வயர்லெஸ் நெட்வொர்க் மூலம் பிசினஸ் டேட்டாவை அனுப்பாமல் இருப்பது நல்லது. நீங்கள் அனுப்பும் தகவல்கள் சத்தமில்லாமல் களவாடப்பட்டு கொண்டு இருக்கலாம்.
3. போன் ஸ்டோரேஜ் என்க்ரிப்சன்
தங்களது டேட்டாவை பற்றி அதிக அக்கறை கொண்டவர்கள் இந்த முறையை பயன்படுத்தி கொள்ளலாம். போன் ஸ்டோரேஜ்ஜை என்க்ரிப்ட் செய்வதால், என்க்ரிப்சன் பாஸ்வேர்ட் மூலமாக தான் போனை பயன்படுத்த முடியும். இது ஸ்க்ரீன் லாக் முறையை விட இன்னும் பாதுகாப்பானது.
4. அறியாத சோர்ஸ்-ன் ஆப்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம்
கூகிள் ப்ளே ஸ்டோர் அல்லாத பிறரிடமிருந்து வரும் ஆப்களை தவிர்ப்பது நல்லது. அப்படி வரும் அனைத்து ஆப்களும் பாதுகாப்பற்றதாக இருக்கும் என சொல்ல முடியாது. ஒரு வேளை அப்படி இருந்து விட்டால், பலனாக இழக்க போவது நமது மதிப்புமிக்க தகவல்களை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
5. ‘ஆன்ட்டி-மால்வேர் ஆப்’-ஐ இன்ஸ்டால் செய்து கொள்க
மால்வேர் என்பது டிவைசை சேதப்படுத்தக்கூடிய, உங்கள் தகவல்களை களவாடக் கூடிய ஒரு சாப்ட்வேர். இதிலிருந்து டிவைசை பாதுகாக்க கூகிள் முயற்சி செய்து வருகிறது.ஆன்ட்டி-மால்வேர் ஆப்பை நிறுவி கொள்வது நல்லது. “Malwarebytes” (https://goo.gl/J5b042) என்பது குறிப்பிடத்தக்க ஆன்ட்டி-மால்வேர் ஆப் ஆகும்.

இதற்கான லிங்க் : https://play.google.com/store/apps/details?id=org.malwarebytes.antimalware&hl=en
6. பாதுகாப்பான ‘அப்டேட் ஸ்கேன்னர்’ இன்ஸ்டால் செய்து கொள்க
டெவலபர்களிடமிருந்து வரும் ஆப் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வரை பாதுகாப்பானதாக இருக்கிறது. ஒருமுறை அப்டேட் செய்த பிறகு மால்வேர் வந்து விடுகிறது. எனவே ‘அப்டேட் ஸ்கேன்னர்’ இன்ஸ்டால் செய்து கொண்டு, ஒவ்வொரு முறையும் அப்டேட் செய்வதற்கு முன்னர் இதை ரன் செய்து கொள்வது அவசியம்.

அப்டேட் ஸ்கேனர்-க்கான லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.iu.seccheck&hl=en
7. ஆப்-ன் அனுமதி பட்டியலை வாசிக்க மறக்காதீர்
ஒரு ஆப் டவுன்லோட் செய்வதற்கு முன்னர், நமது காண்டக்ட்ஸ், போன், நெட்வொர்க் போன்றவற்றை பயன்படுத்த அனுமதி கேட்கும் அனுமதி பட்டியலை (permission list ) வாசிப்பது முக்கியம்.
சந்தேகப்படும் படி அனுமதி பட்டியல் இருந்தால் அந்த ஆப்-பை நிராகரித்து விடுங்கள்.
உதாரணத்திற்கு ஒரு கேம் ஆப் அல்லது weather ஆப் என வைத்துக் கொள்வோம். அது உங்கள் மொபைலில் உள்ள புகைப்படங்களை பயன்படுத்த அனுமதி கேட்டால், அது தேவை அற்றது. வேண்டாம் என சொல்லி விடுங்கள்.
8. சிம் கார்டு லாக் செய்து கொள்க
இதில் ஒவ்வொரு முறையும் போனை ஆன் செய்யும் போது சிம் கார்டை அன்லாக் செய்யும் பாஸ்வேர்ட் அவசியம். இந்த முறை நேரத்தை வீணடிக்கும் என நினைப்பவர்கள் நமது தகவல்களின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். சிம் அன்லாக் உங்கள் மொபைலின் பாதுகாப்பை மேம்படுத்தும்.
9. தேவையற்ற பொழுது ப்ளுடூத் மற்றும் ஹாட்ஸ்பாட் சர்வீஸ்-ஐ ஆப் செய்து விடுக
ப்ளுடூத் மற்றும் ஹாட்ஸ்பாட் சர்வீஸ் ஆன்-ல் இருக்கும் பொழுது, நமது டிவைசை பிறரும் பார்க்க முடியும். இதன் மூலம் நமது தகவல்களை பிறர் எடுத்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. தகவல் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல, பேட்டேரி சார்ஜ் வீணாவதையும் தடுப்பதற்காக தேவையற்ற பொழுது இந்த சர்வீஸ்-ஐ ஆப் செய்து விடுவது அவசியம்.
10. தேவையுள்ள பொழுது மட்டும், ‘லொகேசன் செட்டிங்க்ஸ்’-ஐ ஆன் செய்க
லொகேசன் செட்டிங்க்ஸ்-ஐ ஆன்செய்து வைப்பது, நேரடியாக டிவைசின் பாதுகாப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவது இல்லை என்றாலும், இதன் மூலமாகவும் நமது தனிப்பட்ட தகவல் லீக் ஆக வாய்ப்பிருக்கிறது. பேட்டேரி சார்ஜை விழுங்கும் இது போன்றவற்றை தேவையற்ற பொழுது ஆப் செய்வது புத்திசாலித்தனம்.
மேலே குறிப்பிட்ட விஷயங்களை மனதில் கொண்டு, அதை பின்பற்றினால், நமது தகவல்கள் நம் கை மீறி போவதை முடிந்த வரை தடுப்பதுடன், அதனால் ஏற்படும் தேவையற்ற மன உளைச்சலையும் தடுக்க முடியும்.

Loading...

728

2