new BB1

இந்த ஆன்ட்ராய்டு ஆப்ஸ் உங்க போட்டோவை டக்கராக்கிடும் பாஸ்!

Loading...

14489ஸ்மார்ட்போன் வைத்து கொண்டு போகும் இடம் எல்லாம் புகைப்படம் எடுப்பவரா நீங்கள், உங்களது புகைப்படத்திற்கு அழகு கூட்ட உதவும் சில ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் இருக்கும் ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி உங்களது புகைப்படத்தினை அழகாக மாற்றி கொள்ளலாம். அதன் பின் நீங்கள் முகநூலில் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் லைக்ஸ் தானாகவே அதிகரிக்கும்.
PicsArt
புகைப்படங்கள் சார்ந்த அனைத்து அம்சங்களையும் ஒரே செயலியில் வழங்குகின்றது இந்த செயலி. கேமரா ஆப், எஃபெக்ட் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது வரை அனைத்து ஆப்ஷன்களும் இந்த ஒரே செயலியில் பயன்படுத்த முடியும்.
Pixlr Express
புகைப்படங்களை எடிட் செய்ய சிறந்த ஆப்ஷன் மற்றும் அவற்றை பகிர்ந்து கொள்வது வரை அனைத்தையும் வேகமாக மேற்கொள்ள இந்த செயலி வழி வகுக்கின்றது.
Vignette இது
ஒரு போட்டோ எடிட் செய்யும் ஆப் இல்லை என்பதோடு இது சிறந்த கேமரா அப்ளிகேஷனாக இருக்கின்றது. சிறப்பான புகைப்படங்களை எடுக்க பல ஆப்ஷன்களை இந்த செயலி கொண்டிருக்கின்றது.
Aviary Photo Editor
போட்டோக்களை எடிட் செய்வதோடு அதன் போக்ஸ் சார்ந்த சிறப்பம்சங்கள் மற்றும் மீம் ஜெனரேட்டர் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.
Cymera
இந்த கேமரா செயலி புகைப்படங்களை எடுக்க வழி வகுப்பதோடு அதனினை மேலும் அழகாக மாற்ற பல ஆப்ஷன்களை வழங்குகின்றது. மேலும் இந்த புகைப்படங்களை பேஸ்புக், டுவிட்டர் மற்றும் டம்ப்ளர் போன்ற தளங்களுக்கு நேரடியாக பகிர்ந்து செய்து கொள்ள முடியும்.
Snapseed
நிக் மென்பொருள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த செயலி போட்டோக்களை அழகாக மாற்ற எளிய சிறப்பம்சங்களை வழங்குகின்றது.
Pho.to Lab
போட்டோக்களை எடிட் செய்வதை விட அழகான ஃப்ரேம்கள், எஃபெக்ட்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் ஐகான்களை வழங்குகின்றது.
Photoshop Touch for phone
கணினிகளில் போட்டோகளை எடிட் செய்ய சிறந்த மென்பொருளாக இருக்கும் போட்டோஷாப், ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு வருகின்றது. இனி என்ன ஆண்ட்ராடில் போட்டோஷாப் பயன்படுத்தி போட்டோக்களை எடிட் செய்யலாம்.
VSCO Cam
ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி மிக சிறந்த கேமரா அப்ளிகேஷன் என்பதோடு புகைப்படங்களை எடிட் செய்வதற்கு பல சிறப்பம்சங்களை வழங்குகின்றது.

Loading...

728

2