new BB1

இரத்தச் சோகை குறைபாட்டை நீங்கும் பம்பளிமாஸ் பழம்!

Loading...

195a8838-ded5-447d-a6cd-c3ced11592ad_S_secvpfபம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். உள்ளே ஆரஞ்சுபோல சுளைகள் இருக்கும். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது.

அதற்கென உள்ள சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும். இது குளிர்ச்சி நிறைந்தது. எனவே சளி, இருமல் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. பம்பளிமாஸ் பழங்கள் யாவும் உடலுக்கு நேரடியாக சத்துக்களை அளிக்க வல்லவை. உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் அனைத்தும் இந்த பழங்களில் நிறைந்துள்ளன.

இப்பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும். தினமும் ஒரு பழமோ அல்லது பழக்கலவையோ சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. பித்த அதிகரிப்பை சரி செய்யும் தன்மை பழங்களுக்கும், கீரைகளுக்கும் உண்டு. இதில் பம்பளிமாஸ் பழம் பித்த அதிகரிப்பை வெகு விரைவில் குறைக்கும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவது நல்லது.

கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். கேரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும். அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் பம்பளிமாஸ் பழச்சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

இரத்த சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு. இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும். வருடத்தில் சில மாதங்களே கிடைக்கும் பம்பளிமாஸ் பழத்தை வாங்கி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

Loading...

728

2