new BB1

இளம் வயதில் நரை முடி வரக்காரணம்?

Loading...

42c51dba-fce7-4adc-b3b5-897499afdc05_S_secvpfநமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது.

சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான். சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம். அதிக வெயிலில் அலைந்தால், புற ஊதாக் கதிர்கள், முடியின் ஈரத்தன்மையை உறிஞ்சி, முடியை வறண்டுபோகச்செய்யும்.

இதனாலும் முடி நரைக்கலாம். மேலும், தலைக்கு உபயோகிக்கும் ஷாம்பூ, கண்டீஷனர் போன்ற பொருட்களில் கலக்கப்படும் ரசாயனப் பொருட்களும் நரை ஏற்படக் காரணமாக இருக்கலாம்.நரைத்த முடி, முதிய தோற்றத்தைத் தருமோ என்று அதனைக் கறுப்பாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிடுவர். அதை, இயற்கை வழியிலேயே செய்துகொள்வதன் மூலம் பக்கவிளைவுகளையும் பின்விளைவுகளையும் தடுக்கலாம்.

Loading...

728

2