new BB1

உடல் பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு நோய்களுக்கு எளிய மருத்துவகுறிப்புகள்!

Loading...

1eedeea4-c4aa-4657-ba23-93cb3fcb55a0_S_secvpf (1)வாயுத்தொல்லைக்கான எளிய தீர்வுகள்

* வாயுவினால் உண்டாகும் வயிற்று வலிக்கு பெருங்கயத்தை நெய்யில் போட்டு பொரித்து சாப்பிடவும்.

* வாயுத்தொல்லை தீர கொய்யாபழம் சிறந்த மருந்து.

* இஞ்சி, சுக்கு, கடுக்காய் சாப்பிட வாயுபிடிப்பு பறந்துபோகும்.

* வாயுத்தொல்லை தீர புதினா துவையல் அதிகமாக சாப்பிடலாம்..

வாய்நாற்றத்திற்க்கு

* சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

தொடர் விக்கலுக்கு

* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

பித்த வெடிப்புக்கு

* கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

தேமல்

* வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்

* கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்

* வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

Loading...

728

2