new BB1

ஊறு விளைவிக்குமா ஊறுகாய்?

Loading...

ht3523‘இது முழுக்க உண்மையில்லை. ஊறுகாய் சிலருக்கு நன்மையும் தருகிறது. நரம்பியல் கோளாறு, குறைந்த உப்புச்சத்து, குறை ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சத்துகளை சமன்படுத்த ஊறுகாய் கொஞ்சம் உதவி செய்கிறது. மருந்துகள் நிறைய எடுத்துக்கொள்வதால் நாக்கின் சுவை அரும்புகள் சிலருக்குச் செயல்படாமல் இருக்கும். அவர்களுக்கு சுவை அரும்பு களைத் தூண்டிவிடுவதாகவும் ஊறுகாய் செயல்படுகிறது. கர்ப்ப காலத்தில் வாந்தி வருகிற உணர்வைக் கட்டுப்படுத்தவும், காரசாரமாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்துக்காகவும் ஊறுகாயை சேர்த்துக்கொள்வதில் தவறில்லை.

செரிமானத்துக்கு இஞ்சியையும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பூண்டையும், வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்துவதற்கு எலுமிச்சையையும், நெல்லிக்காயை நேரடியாக சாப்பிட முடியாதவர்கள் நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவற்றையும் உணவில் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். நேரடியாக காய்கறிகளின் மூலம் சத்துகள் கிடைக்கும் அளவு ஊறுகாயின் மூலம் கிடைக் காது என்பதையும் மறக்கக் கூடாது.

இவை எல்லாம் ஊறுகாயில் இருக்கும் நல்ல விஷயங்கள். உங்கள் தோழி கூறியிருப்பதுபோல எண்ணெய், காரம், உப்பு போன்றவை ஊறுகாயில் அதிகம் சேர்க்கப்படும் என்பதால், அளவோடு பயன்படுத்துவதே நல்லது. ஊறுகாய் என்பது தொட்டுக் கொள்வதற்கானது மட்டுமே… சிலர் சாப்பாட்டு டன் பிசைந்து சாப்பிடுகிற அளவு சேர்த்துக் கொள்வார்கள். அது மிகவும் தவறு. ஊறுகாயை தினமும் பயன்படுத்துவதும் தவறுதான். இதுபோல அளவு கடந்த ஊறுகாய் பயன்பாட்டால் அல்சர், உணவுக்குழாய் எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

சந்தையில் விற்கப்படும் ஊறுகாயில் தரமற்ற எண்ணெய், தடை செய்யப்பட்ட நிறமிகள் போன்றவை கலக்கப்பட்டிருந்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. அதனால் அளவோடு, கவனமுடன் ஊறுகாயைப் பயன்படுத்துங்கள். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் ஊறுகாய் சாப்பிடக் கூடாது. அப்படியும் ஊறுகாய் சாப்பிட விரும்பினால் வினிகர் கலந்த ஊறுகாய் அல்லது உலர வைத்த ஊறுகாய் சேர்த்துக் கொள்ளலாம். வயது அதிகமாகும் போது உடலின் வளர்சிதை மாற்றங்கள் நடக்கிற வேகமும் குறையும் என்பதால், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும்!’’

Loading...

728

2