new BB1

எவ்வளவுதான் வெயிலடிச்சாலும் பொண்ணுங்க எப்படி பிரஷ்ஷா இருக்காங்க!

Loading...

ld1085பொண்ணுங்க எல்லாம் எப்பவும் தன்ன அழகா வச்சுக்கிற விஷயத்துல சர்வ ஜாக்கிரதையாக இருப்பாங்க. மழையோ அல்லது குளிரோ இப்ப வறுத்து எடுக்கிற வெயிலோ எதுவும் தன்ன பாதிச்சிடக் கூடாதுன்னு தனக்கு தெரிஞ்சவங்க கிட்டயெல்லாம் பியூட்டி டிப்ஸ் கேப்பாங்க.

சென்னையில இப்ப வெயில் நூறு டிகிரிய தொடும்போதே டூ வீலர்ல போற பொண்ணுங்க துப்பட்டாவுல முகத்த மூடிக்கிட்டும், கண்ணுக்கு ரேபான் மாட்டிக்கிட்டும் விருட்டுன்ணு போறத பாத்திருப்பீங்க. நடந்துபோறவங்களும் அதே மாதிரிதான், ஆனா எக்ஸ்ட்ரா குடையோட. கொளுத்துற வெயிலுக்கு தங்கள எப்படி பாதுகாக்கிறாங்கன்னு கேட்டபோது:

தூங்கும்போது பப்பாளி பழம் பிளஸ் பன்னீர், கொஞ்சம் குங்குமப்பூ மூன்றையும் மிக்சியில் போட்டு பேஸ்டு மாதிரி தயார் பண்ணி முகத்தில் இருந்து கழுத்துவரைக்கும் அப்ளை பண்ணிக்குவேன். கண்ணுக்கு வெள்ளரி பிஞ்சுகள கட் பண்ணி பிக்ஸ் பண்ணிப்பேன்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஜில் வாட்டர்ல வாஷ் பண்ணிக்குவேன். வாஷ் பண்ணும்போது முகமே புது பொலிவோட இருக்கும்.

முகத்துக்கு கடல மாவு, குங்குமப்பூ ஆகிய இரண்டையும் பன்னீரில் கலந்து அப்ளை பண்ணிக்குவேன். பிறகு அரை மணி நேரம் கழிச்சி குளிச்ச உடனே மொகமே கண்ணாடி மாதிரி பளிச்சின்னு இருக்கும். இது மறுநாள் காலை வரைக்கும் முகத்த பிரஷா வைச்சுக்க உதவும்.

காலைல எழுந்தவுடனே பிரஷ் பண்ணிட்டு ரெண்டு இளநீர் குடிப்பேன். அதேபோல அதிக ஜூஸ் எடுத்துக்குவேன். இதுனால நாள் முழுக்க உடம்பு ரெப்பெரஷா இருக்க உதவும். அதே மாதிரி வீட்டுக்கு போனவுடனே வெயில் காரணமாக காலில் வெடிப்பு ஏற்பட்டம இருக்க ஒரு சின்ன பக்கெட்ல பாதியளவு தண்ணி, கொஞ்சம் பன்னீர், கொஞ்சம் குங்குமப்பூ கலந்து 30 முதல் 45 நிமிஷம் வரை ஊறவைப்பேன். இதனால பாதங்கள் வெடிப்பு இல்லாம சாப்டா இருக்க உதவும்.

கூடுமானவரைக்கும் வெயிலில் அலையுற அவாய்ட் செய்தாலே போதும். நெறைய தண்ணீர் குடிக்கணும். நார் சத்து உள்ள பழங்கல சாப்பிட்டாலே போதும். என்ன மாதிரி நடுத்தர வர்க்க பெண்களுக்கு இதுவே ஹெல்த் கேர் டிப்ஸ். ரொம்ப ஸ்டெய்லிஷா இருக்கிறதுக்கு பெரிசா ஒன்னும் அலட்டிக்கிறது இல்ல

Loading...

728

2