new BB1

கண் பார்வையை கூர்மையாக்கும் பீட்ரூட் கீரை

Loading...

பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை.

18ac109f-c652-4119-bbf9-3a97230435dd_S_secvpf

இக்கீரையை பொரியலாகவோ, துவரம் பருப்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம்.

பாசிப்பயறு, தட்டைப்பயிறு, முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இப்பயறுகளுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும். சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.

பீட்ரூட் கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் எண்ணும் உயிர்சத்து அதிகம் உள்ளது. இந்த கரோட்டின் விட்டமின் A சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன.

எனவே இதனை விட்டமின் Aயின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். பச்சையாக உண்பதால் விட்டமின் A நேரடியாக நம் உடலில் சேருகிறது. இதனை கத்தியைக் கொண்டு பறிக்கக் கூடாது. கையால் திருகி பறிக்கவேண்டும்.

பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். தையாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடின் அமிலம், விட்டமின் C போன்றவை அதிகம் உள்ளது.

பீட்ரூட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது.

மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும். இக்கீரை கல்லீரலுக்கு வலிவு கொடுக்கிறது.

உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு இந்த இலையில் சாற்றினை தடவ எரிச்சல் தணியும். விட்டமின் A அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்கு தெளிவையும், பார்வையும், கூர்மையும் ஏற்படுத்துகிறது.

உடற்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலும், கண் நோய்கள் குணமடையும் என்றும் உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Loading...

728

2