new BB1

கவனம் குண்டூஸ்!

ht3228‘உலக அளவில் பருமனில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பருமனால் ஏற்படும் நோய்களில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். இந்நிலை நீடித்தால், 2020ம் ஆண்டுக்குள் சர்க்கரை, ரத்த அழுத்த நோய்கள் கணக்கில்லாமல் வளர்ந்து விடும்’’ என்கிறார் கொழு உடல் மருத்துவவியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் பழனியப்பன்.

‘‘பருமனை ஒழிப்பதன் மூலம் நீரிழிவு, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்க மூச்சின்மை, குழந்தையின்மை, நாளமில்லா சுரப்பி பிரச்னைகள் போன்றவற்றையும் தவிர்க்க முடியும். தசை குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் இருப்பதுதான் இந்தியர்களுடைய உடல்வாகு. நமது உணவுமுறைகளில் ஏற்பட்ட மாற்றம், உடலில் அதிகக் கொழுப்பை சேர்த்துக் கொண்டிருக்கிறது. பாடி மாஸ் இன்டக்ஸ் கணக்கிட்டுதான் பருமனை முடிவு செய்கிறோம். 22.5 புள்ளிகள் இருந்தால் சராசரி எடை, 27.5 புள்ளிகள் – அதிக எடை, 27.5 புள்ளிகளைத் தாண்டினாலே பருமன்தான்.

32.5 புள்ளிகள் – மிதமான பருமன், 37.5 புள்ளிகள் – அதிக பருமன், 37.5க்கும் அதிகமானால் அபாயகரமான பருமனாகும். அதிக பருமனுக்கும் அபாயகரமான பருமனுக்கும் பேரியாட்ரிக் சிகிச்சை அவசியம். இதில் வயிற்றில் பசியின் அளவைக் குறைப்பதற்காக இரைப்பையின் அளவையும் சிறு குடலின் செயல் நிலையையும் சுருக்கப்படும். இதன் பிறகு, குறைவான அளவு உணவு உட்கொண்டாலே வயிறு நிறைவதுடன், தேவையற்ற கொழுப்புகளும் உடலில் தங்காது’’ என்கிறார்.

728