new BB1

குறைந்த எடையுடன் மிக மெல்லிய “சோனி எக்ஸ்பீரியா Z4 டேப்லட்” – ஒரு பார்வை

Loading...

சோனி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் அனைவரையும் கவரக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில் சோனியின் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் போன்றவை சிறப்பான அம்சங்களுடன் வெளிவருகின்றன. சோனி தயாரிப்பில் டச் மற்றும் மெல்லிசமான வடிவமைப்பு அனைவருக்கும் பிடிக்கும்

20015744

தற்போது இதன் அடுத்த தயாரிப்பாக சோனி எக்ஸ்பீரியா Z4 டேப்லட் வெளியாகவுள்ளது. இதன் டேப்லட்-ன் மிகவும் திடமான வடிவமைப்பு, பயன்படுத்த மிக சிறந்ததாக உள்ளது.

இது மார்க்கெட்டில் வெற்றி பெறுவதோடு மற்ற ஆண்டிராய்ட் டேப்லட்டிற்கு நல்ல போட்டியை தரும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள்

10.1” அல்ட்ரா 2K திரை Qualcomm Snapdragon 810 பிராசசர்மெல்லிய வடிவமைப்பு வாட்டர் ரெசிஸ்டண்ட் 6000mAh பேட்டரி திறன்6.1mm தடிமன் மற்றும் 393g எடை PS4 ரிமோட் பிளே சப்போர்ட் 4G LTE மற்றும் Wifi வசதிவிலை ரூ.31863/-
இதன் 6.1mm தடிமன் மற்றும் 393g எடை அளவு மட்டுமே கொண்டுள்ளது. இதனால் மார்க்கெட்டில் மிகவும் லேசான டேப்லட் மத்தியில் இதுவும் முக்கிய இடத்தை பிடிக்கும்.
இது மிகவும் மெல்லியதாக உள்ளதால் பயனர்கள் கைக்கு நல்ல அடக்கமானதகவும், தினமும் பயன்படுத்த ஏதுவானதாகவும் உள்ளது.

இந்த டேப்லட்டில் குறைந்த எடை மற்றும் மெல்லிய தோற்றம் மட்டுமே சிறந்ததாக இல்லாமல், இதன் மற்ற அம்சங்களும் போற்றும்படியாக உள்ளது.

இதில் உள்ள வாட்டர் ரெசிஸ்டண்ட் (water resistant) வசதி கவரும் வகையித நிலையிலும் இதனுள் தண்ணீர் செல்லாத அளவுக்கு வடிவமைக்கபட்டுள்ளது. மேலும் 2560 x 1600 பிக்சல் வசதி கொண்ட 10 இன்ச் தில் உள்ளது. தண்ணீரில் டேப்லட் விழுந்தாலும் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.

மேலும் 2560 x 1600 பிக்சல் வசதி கொண்ட 10 இன்ச் திரை மற்றும் octa-core Snapdragon 810 பிராசசர் கொண்டு வருகிறது.

6000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த டேப்லட்-ஐ மிக நீண்ட நேரம் தடையில்லாமல் பயன்படுத்தலாம். இந்த சோனி டேப்லட்-ல் எந்த ஒரு தடையுமின்றி சுமார் 17 மணி நேரங்கள் வரை வீடியோக்களை பார்க்கலாம்.

அதே போல் இதன் பின்புறம் தொடுவதற்கு மிகவும் மென்மையானதாகவும், பிடிப்பதற்கு எளிமையானதாகவும் உள்ளது. மேலும் இதன் திரை பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமானதாகவும், டச் வசதி மிக விரைவாகவும், துல்லியமாகவும் செயல்படுகிறது.

மேலும் இதனுடன் PS4 ரிமோட் பிளே சப்போர்டையும் பெறலாம். இது கேம் விளையாடுவதற்கு கூடுதல் தரத்தை கொடுக்கிறது. அதோடு 4G LTE மற்றும் Wifi வசதியை சப்போர்ட் செய்யும்.

இது வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும்.

இதனுடன் சார்ஜர், யூஎஸ்பி கேபிள் போன்றவை உங்களுக்கு கிடைக்கும். இந்த டேப்லட் விரைவில் கிடைக்கப்பெறும் என சோனி தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே மே மாத இறுதியில் இந்த சாதனத்தை வெளியிடப்போவதாக முதலில் அறிவித்திருந்தது. அதன் பின் ஜூன் 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. தற்போது உண்மையில் இந்த மாத இறுதியில் அதாவது ஜூன் 29 ஆம் தேதி விற்பனையை ஆரம்பிக்கப்போவதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading...

728

2