new BB1

கூகுளின் ஆண்ட்ராயிட் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பு M-ன் அம்சங்கள்

Loading...

மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளம் (OS) ஆண்டிராயிட்-டின் லேட்டஸ்ட் பதிப்பு லாலிபாப் தற்போது நடைமுறையில் உள்ளது. அடுத்து வரப்போகிற பதிப்பு ஆண்டிராயிட் M.

நேற்று மற்றும் இன்று நடைபெறும் கூகுளின் I/O மாநாட்டில், புதிய ஓஎஸ் ஆண்ட்ராயிட் M-ன் சில அம்சங்கள் அறிமுகபடுத்தப்பட்டது. முந்தைய பதிப்பு லாலிபாப் டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுத்து மெட்டிரியல் டிசைன் என வந்தது. இந்த புதிய பதிப்பு M அடிப்படை விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூகுள் அறிவித்து உள்ளது.

இந்தாண்டு இறுதியில் வெளியாகும் இந்த ஓஎஸ்-ன் முன்னோட்டத்தை தற்போது டெவலப்பர்கள் மட்டும் இன்று காண முடியும்.

android-m-logo-smaller-w782

இனி ஆண்ட்ராயிட் M-ன் சிறப்பம்சங்கள் :

1. ஆப் பெர்மிசன் இனி அச்சுறுத்தும் வகையில் இருக்காது

இதுவரையில் ஆண்ட்ராயிட் மொபைலில் ஆப்கள் டவுன்லோட் செய்யும் போது ஆப் பெர்மிசன் என ஒரு நீண்ட பட்டியலை காண்பிக்கும். பெரும்பாலும் குழப்பமான வாசகங்கள். இதை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என குழப்பமாக இருக்கும். இனி ஆப் டவுன்லோட் செய்யும் போது அந்த தொல்லை இராது.

இனி ஆப்-பை பயன்படுத்தும் போது தேவைப்படும் போது தனித்தனியாக அதற்குரிய பெர்மிசனை கேட்கும். எடுத்துகாட்டாக, “இந்த ஆப் உங்கள் கேமராவை பயன்படுத்த அனுமதி வேண்டும்.” , “இந்த ஆப் உங்கள் மைக்ரோபோனை பயன்படுத்த அனுமதி கேட்கிறது ” என ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு கேட்கும்.

Loading...

728

2