new BB1

கூகுளின் MODULAR SMARTPHONE விரைவில்!

Loading...

download (7)உலகின் தொழில்நுட்பத்தின் முன்னனி நிறுவனமான Modular Smartphone பல்வேறான புதிய படைப்புக்களில் காலடி பதித்து வருகின்றது.
இந் நிலையில் கூகுள் நிறுவனமானது தற்போது ஸ்மார்ட் போனை தனித்தனி பாகங்களாக பிரித்து இணைத்துக் கொள்ளும் (Modular Smartphone) தயாரித்து வருகிறது.
இதற்கு முன்னதாக இந்த திட்டம் மோட்டோரோலோவிடம் தான் இருந்தது. கூகுள் நிறுவனம் மோட்டோரோலா நிறுவனத்தை வாங்கிய பிறகு தற்போது இந்த திட்டத்துக்கு கூகுள் நிறுவனம் புதிய செயல் வடிவம் கொடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
போனில் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி இணைப்புகள் என மேற்பாகம் உள்ள ஸ்கிரீன் தவிர பிற பாகங்கள் அனைத்தும் இணைப்புகளாக உருவாக்கப்படுகிறது.
உதாரணத்துக்கு இந்த போனில் செயல்படும் கமெராவை மட்டும் தனியாக பிரித்து எடுத்து விடலாம். கமெராவின் திறன் அதிகரிக்க வேண்டும் என்றால், உதிரி பாகமாகக் கிடைக்கும் திறன் அதிகமாக உள்ள கமெராவை பொருத்திக் கொள்ளலாம். மேலும் போனில் ஏதேனும் பழுது என்றால் போனை கொடுத்துவிட்டு காத்திருக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட பாகத்தை கழற்றி வீசிவிட்டு வேறு பாகத்தை பொருத்தி உபயோகிக்கலாம்.
இவ்வாறான பல வசதிகளை கொண்ட Modular Smartphone மிக விரைவில் சந்தைக்கு வரும் என எதிபார்க்கப்படுகின்றது.

Loading...

728

2