new BB1

கூகுள் சேர்ச் ஆப்-ல், “இருப்பிடம் அறிந்து சேர்ச்” செய்யும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது

Loading...

பொதுவாக நாம் எந்த ஒரு விசயத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானாலும், நமக்கு முதலில் நினைவிற்கு வருவது கூகுள் சேர்ச். அன்றாடம் 3 பில்லியனுக்கும் மேற்பட்டோர் இதை பயன்படுத்தி, தகவல்களை பெறுவதாக ஒரு கணிப்பு கூறுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில், எவ்வித தகவலை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் கூகுள் சேர்ச்சில் ஒரு புதிய அம்சம் புகுத்தப்பட்டுள்ளது.

googlesearch

நாம் இருக்கும் இருப்பிடத்தை அறிந்து, அதற்கு ஏற்றவாறு சேர்ச் முடிவுகளை கொடுக்கும் இந்த புதிய அம்சத்தை, சத்தமே இல்லாமல், இதில் இணைத்திருக்கிறார்கள் கூகுள் நிறுவத்தினர். ஆன்றாயிட் மற்றும் iOS மொபைல்களில் கூகுள் சேர்ச் ஆப்பில், “இருப்பிடம் அறிந்து சேர்ச்” செய்யும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு, ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிறது. அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் இன்றி இது செயல்படுத்த பட்டதால், பலரும் இதை பற்றி இன்னும் அறியவில்லை.

ஆன்றாயிடின் அனைத்து வெர்சனிலும், iOS மொபைல்களிலும் இது செயல்படுவதை, பயன்படுத்தியவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

அதென்ன “இருப்பிடம் அறிந்து சேர்ச்” செய்வது ?

நாம் இருக்கும் இடத்தின் பெயரை கூறாமலே, அதை பற்றிய தகவலை பெற முடியும். உதாரணமாக, நாம் தாஜ் மஹாலில் இருந்து கொண்டு, “இது எப்பொழுது கட்டப்பட்டது?” என வாய்ஸ் சேர்ச் மூலம் கேட்டால், “1632-ம் ஆண்டு” என அதற்குரிய பதில்கிடைக்கும்.

சென்னை Sky Walk பக்கத்தில் நின்று கொண்டு, “இந்த மால் எப்பொழுது திறக்கப்படும்?” என கேட்டால், அது திறக்கப்படும் நேரம் நமக்கு பதிலாக கிடைக்கும்.

இதே போல, நமது வீட்டின் அருகே உள்ள பள்ளி, ரெஸ்டாரண்ட், தியேட்டர், நதியின் ஆழம், போன்ற எந்த தகவலையும், அதன் பெயரை குறிப்பிடாமலே, நாம் பெற்று கொள்ள முடியும்.

இந்த அம்சம், GPS மூலம் நமது இருப்பிடம் அறிந்து, நமக்கு தேவையான தகவலை தருகிறது. இதை பயன்படுத்துவதற்கு முன், “Location Settings”-யை ஆன் செய்து வைக்க வேண்டும். இப்பொழுது உங்களுக்கு வேண்டிய கேள்விகளை கேட்டு அதற்குரிய தகவல்களை பெற்று கொள்ளலாம்.

இதன் கூடுதல் சிறப்பு, நாம் ஒரு இடத்திற்கு புதிதாக செல்கிற பட்சத்தில், அங்குள்ள இடங்களில் பெயர்கள் அனைத்தும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது போன்ற சமயங்களில், அவற்றின் பெயர் தெரியவில்லை என்றாலும், “அதன் பெயர் என்ன?”, “எப்பொழுது திறக்கப்படும்?” என கேட்டு, உரிய தகவல்களை பெற முடியும்.

Loading...

728

2