new BB1

கோடையில் உடலுக்கு குளுமை தரும் பதநீர்!

Loading...

e4803ebc-7191-44ef-80cf-99fcabf428d5_S_secvpfபதநீரை தேன் போன்ற பதம் வரும் வரை காய்ச்சி, அதில் புளி போட்டு ஒரு பானையில் வேடு கட்டி வைத்து விடுவார்கள். மூன்று மாதம் கழித்து அதைச் சாப்பிட்டால் புளிப்பும் இனிப்புமாக சுவையிருக்கும். இதன் பெயர் “புளிப் பதநீர்’. பதநீரை சிறிது சுக்குத்தூள் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பதநீரை நன்றாகக் காய்ச்சி பாகு பதத்தில் இளஞ்சூடாகச் சாப்பிட்டால் மிகவும் தித்திப்பாக இருக்கும். பதநீர் உடல் உஷ்ணத்தை உடனே தணித்து உடலைக் குளிர வைக்கும் தன்மை கொண்டது. பதநீரில் குழந்தைகளின் எடையைக் கூட்டும் சக்தியான இரும்புச்சத்து தயாமின், அஸ்கார்பிக் அமிலம், புரோட்டீன் ஆகிய சத்துகள் உள்ளன.

உடலுக்குச் சக்தியைத் தரும் குளுகோஸ், எலும்பு, பல், நகங்களின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச்சத்து, ரத்தத்தை விருத்தி செய்யும் ரிப்போ பிளோரான் சத்தும் பதநீரில் உள்ளது. கோடையில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழத்தைச் சாப்பிட்டால் உடலில் சூடு பிடிக்கும். இனிப்பு மாம்பழங்களைத் துண்டு துண்டாக நறுக்கி பதநீரில் போட்டுச் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்துவிடும்.

புளிக்காத பதநீர் எனக் கேட்டு வாங்கிப் பருக வேண்டும். புளித்தால் அது கள் ஆகி போதையை ஏற்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சியும், வலிமையும், ஊட்டச்சத்தும் நிறைந்தது பதநீர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது.

இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது. கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது. மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது. என்னதான் கூல்டிரிங்ஸ் இருந்தாலும், இயற்கையாக குளிர்ச்சியும், வலிமையும் தரும் பதநீருக்கு என்றுமே அழிவில்லை.

Loading...

728

2