new BB1

கோடை காலத்தில் பெண்களுக்கு இதம் தரும் ஆடைகள்!

Loading...

d3e9e095-2ce9-41aa-87f7-c87bcda9a735_S_secvpfகோடைக்காலத்தில் பெண்கள் அணிய வேண்டிய உடைகள் இதமானதாகவும், அதே சமயம் ஃபேஷனாகவும் இருக்க வேண்டும். கோடைக்காலத்திற்கு பருத்தி ஆடைகளே சிறந்தவைகளாக விளங்கும். உங்களை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் ஆற்றலை பெற்றுள்ளதால், இந்திய பருத்தியானது உலகம் முழுவதும் பிரபலமாகும்.

கோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்க பல வகையான இந்திய காட்டன் உடைகள் கிடைக்கின்றன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகையாக விளங்குகிறது காதி. அதனை சேலையாக, சல்வார் கமீஸாக மற்றும் பாவாடையாக அணியலாம்.

வெப்பமான தட்ப வெப்பநிலைக்கு லூசான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்திற்கு உகந்த ஆடைகள் கிடையாது.

* கோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேன்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும். இந்த பேன்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேன்ட்டை அணியலாம்.

* பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.

* சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.

* அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.

* இப்போதெல்லாம் லூசான பேன்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள். வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.

Loading...

728

2