new BB1

சாதாரண ஃபேன்களில் வரும் காற்றை விட ஏழு மடங்கு அதிவேக காற்றை கொடுக்கும் Q ஃபேன்

Loading...

2009358சாதாரண ஃபேன்களில் இருந்து வரும் காற்றை விட ஏழு மடங்கு அதிகமாக இலகுவான, சிறிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஒரு புதிய மாடல் ஃபேனை பானாசோனிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Sokaze-ki Q என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஃபேன்களில் திரவ இயங்குமுறைகளை பயன்படுத்தி சாதனத்தின் 10- இன்ச் (25cm) அளவுடைய பின்புற வழியில் காற்றை எடுத்து விசேஷமாக வடிவமைக்கப்பட்ட சேனல்கள் மூலம் சென்று டர்போஃபேன் வழியாக முன் பக்கத்தில் அதிவேகமாக காற்றை கொடுக்கும்.
பந்து வழியாக காற்று நகரும் கான்செப்ட் அடிப்படையில், இந்த சேனல்கள் எந்தளவுக்கு காற்று ஓட்டத்தை இழுத்து குறைக்க முடியுமோ அந்த வகையில் வடிவமைக்கப்பட்டது. மற்றும் இது போன்ற ஒரு வழியில் துளைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதனால் கூடுதலான காற்றின் ஓட்டத்தை சேகரித்து அதன் பயணப் பாதை வழியாக சாதனத்தை விட்டு காற்று வெளியில் செல்கிறது.
Q ஃபேனை சுற்றிலும் பெரிய வட்டத்தில் தொகுக்கப்பட்ட ஏர் inlets பயன்படுத்தி கூடுதல் காற்றை இழுத்து வெளியில் தள்ளும், இந்த அனைத்து காற்றுகளும் முக்கிய நிலையங்களின் மூலம் வெளியனுப்பப்படுகிறது. இந்த சாதனத்தை வடிவமைத்த பானாசோனிக் ஜப்பான் நிறுவனம், சாதனத்தில் டர்போஃபேன் முன் வழியாக வெளி வரும் காற்று, உயர் அழுத்த ஜெட் விமான ஓட்டத்தின்போது, வீசப்படும் அதிவேக காற்று போன்ற உணர்வை கொடுக்கும்.
Q ஃபேன் ஜப்பானில் ¥ 39,350 (£ 220) என்ற விலையில் விற்பனைக்கு உள்ளது மற்றும் கிரிஸ்டல் ரெட், சாம்பெய்ன் கோல்டு மற்றும் பேர்ல் ஒயிட் போன்ற வண்ணங்களில் கிடைக்கும். இது மெயினில் சொருகப்பட்டு டிசி மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஒன்று முதல் மூன்று மணி நேரம் வரை டைமர் செய்து அதனை ஆஃப் செய்யலாம். இது 10 இன்ச் (25 செ.மீ.) விட்டம், 11 (27 செமீ) இன்ச் உயரமும் மற்றும் 4.6lbs (2.1kg) எடையும் கொண்டுள்ளது.

Loading...

728

2