new BB1

சுவையான சில்லி மட்டன் கிரேவி ரெடி!

Loading...

A1712_12
தேவையானபொருட்கள்
ஆட்டுக்கறி – கால் கிலோ
பச்சை மிளகாய் – 10
முந்திரி – 10
பூண்டு – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
சோம்பு – அரை தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு – 3/4 தேக்கரண்டி
பட்டை – 3 துண்டு
கிராம்பு – 3
மல்லித்தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 3 1/2 மேசைக்கரண்டி
அரைக்க :
முந்திரி – 12
சோம்பு – ஒரு மேசைக்கரண்டி
மிளகு – அரை மேசைக்கரண்டி
கசகசா – 3/4 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல் – அரை கப்
இஞ்சி – ஒரு அங்குலத்துண்டு

செய்முறை
பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொண்டு மூன்றாக நறுக்கிக்கொள்ளவும். முந்திரியை துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். பூண்டை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்.

இஞ்சியை தோல் சீவி சிறுத்துண்டுகளாக நறுக்கவும். முந்திரி, சோம்பு, மிளகு மற்றும் கசகசா இவற்றை தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறியதும் அதை மிக்ஸியில் போட்டு இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் 1 1/2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் பச்சைமிளகாயைபோட்டு ஒரு நிமிடம் வதக்கிவிட்டு பூண்டு சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் வதக்கியப்பிறகு வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

அதில் மட்டனை போட்டு பிரட்டி விடவும். பின்னர் அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி விசில் போட்டு 5 விசில் வந்ததும் 3 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.

வெந்ததும் எடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

குக்கரில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, உளுத்தம் பருப்பு, சோம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் முந்திரியை போட்டு வதக்கி விட்டு புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்.

அதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் மட்டன் கலவையை ஊற்றவும். அதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கசகசா விழுதை போட்டு ஒன்றாக சேரும்படி கலந்து விடவும்.

பின் அதில் மல்லித்தூள், உப்பு போட்டு கிளறி விடவும்.

மிக்ஸியில் கால் கப் தண்ணீர் ஊற்றி அலசி குழம்பில் ஊற்றவும். அடுப்பில் 10 நிமிடம் வைத்திருக்கவும். இடையில் கிளறி விடவும்.

மல்லித்தூள் வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும். கிரேவி பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

சுவையான சில்லி மட்டன் கிரேவி தயார்.

Loading...

728

2