new BB1

சுவையான திராட்சை ஊறுகாய் ரெடி!

Loading...

A1724_06
தேவையானபொருட்கள்
பச்சை திராட்சை – கால் கிலோ
மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – கால் கப்

செய்முறை
திராட்சை வாங்கும் போது நன்கு புளிப்பாகவும், காயாகவும் வாங்க வேண்டும். திராட்சையை இரண்டாக வகுந்து விதையை நீக்கி விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, பெருங்காயத் தூள் போடவும். பிறகு அதனுடன் திராட்சையை போடவும்.

திராட்சை நன்கு வேகும் வரை 5 நிமிடங்கள் வதக்கி விடவும்.

நன்கு வெந்ததும் மிளகாய் தூள், உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்.

2 நிமிடம் நன்றாக வதக்கி விட்டு இறக்கி வைத்து விடவும்.

சுவையான காரசாரமான திராட்சை ஊறுகாய் தயார். தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Loading...

728

2