new BB1

சுவையான பச்சைப்பயிறு குழம்பு ரெடி!

Loading...

A1753_06
பச்சைபயிறு – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
கறிவேப்பிலை
உப்பு
மஞ்சள் தூள்
சோம்பு – கால் தேக்கரண்டி
எண்ணெய்
வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் – 4
தனியா – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று (அல்லது) சின்ன வெங்காயம் – 7
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி

செய்முறை
பருப்பை வாசம் வர வறுத்து நீரில் கழுவி பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியுடன் 2 கப் நீர் விட்டு குக்கரில் ஒரு விசில் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய அனைத்தையும் (தேங்காய் தவிர) ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து எடுக்கவும்.

இதை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.

அதே பாத்திரத்தில் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

இதில் வேக வைத்த பருப்பு கலவை, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

சுவையான மணமான பாசிப்பயிறு குழம்பு தயார்.தேவையானபொருட்கள்

Loading...

728

2