new BB1

சுவையான பால் அடைப் பாயாசம் ரெடி!

Loading...

21584
தேவையானபொருட்கள்
ரெடிமேட் அடை – 100 கிராம்
பால் – முக்கால் லிட்டர்
மில்க் மெய்ட் டின் சிறியது- சுமார் 150 கிராம்
(அல்லது) சீனி – 200 கிராம்
ஏலக்காய்த்தூள் – 2 பின்ச்
சாஃப்ரான் – 1 பின்ச்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி -பத்து
உலர் திராட்சை -10
உப்பு – பின்ச்(விரும்பினால்)

செய்முறை
ரெடிமேட் அடையை முதலில் கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்கவும்.அடை பெரிய துண்டுகளாக இருந்தால் கையால் சிறிது நொறுக்கி கொள்ளவும்.
பாலைக் காய்ச்சவும்.காய்ச்சிய பாலில் வேக வைத்த அடையை எடுத்து சேர்க்கவும்.ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.சாஃப்ரான் சேர்க்கவும்.கொதி வரட்டும்.சிம்மில் வைத்தால் சிறிது பால் வற்றி ஆடை பிடிக்கும்.
பின்பு அத்துடன் மில்க் மெய்ட் சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.
தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து அடைப் பாயாசத்தில் சேர்க்கவும்.
சுவையான பால் அடைப் பாயாசம் ரெடி.
சாஃப்ரான் சேர்ப்பதால் கிரீம் கலரும் மணமும் சுவையும் அருமையாக இருக்கும்.

Loading...

728

2