new BB1

சுவையான பொங்கல் பலகறிக் குழம்பு ரெடி!

Loading...

A1767_08
தேவையானபொருட்கள்
பூசணி, பரங்கி, கத்தரி, காரட், உருளைக்கிழங்கு,
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு,
வாழைக்காய் – சற்று பெரிதாக நறுக்கிய துண்டுகள் தலா கால் கப்
மொச்சைக் கொட்டை, பட்டாணி – கால் கப்
அவரை, கொத்தவரை, பீன்ஸ் – கால் இன்ச் நீள துண்டுகள் தலா 1/8 கப் (கால் கப்பில் பாதி)
துவரம் பருப்பு – கால் கப்
புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க:
பெருங்காயம் – ஒரு துண்டு
கடலைப் பருப்பு – 4 தேக்கரண்டி
தனியா – 6 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 10 முதல் 15
துருவிய தேங்காய் – அரை கப்
தாளிக்க:
கடுகு – 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை

செய்முறை
புளியுடன் 4 கப் நீர் சேர்த்துக் கரைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள காய்கறிகளை அதன்படி நறுக்கி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3 மேசைக்கரண்டி எண்ணெயில் முறையே பெருங்காயம், கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், தேங்காய் முதலியவற்றை தனித் தனியே சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக்கவும்.

காய்கறித்துண்டுகளை நீர் சேர்த்து நசுங்கும் பதத்திற்கு வேக வைத்து வடிகட்டவும்.

புளிக்கரைசலைக் கொதிக்கவிட்டு சற்று புளிவாசனை போனதும் பாதி வெந்த காய்கறிகள், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து சேர்ந்து கொண்டதும், அதில் பொடி செய்த கலவை, வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

10 நிமிடம் கொதித்ததும் இறக்கி, ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் கடுகு, வாய் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளித்து போடவும். மேலே கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

கமகமக்கும் பொங்கல் ஸ்பெஷல் குழம்பு ரெடி. விருப்பப்பட்டால் இதில் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம். எல்லா காய்கறிகளும் கிடைக்காவிட்டால் இருக்கும் காய்கறிகளை வைத்தும் இந்தக் குழம்பு செய்யலாம். முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் இதில் சேர்ப்பதில்லை.

Loading...

728

2