new BB1

சுவையான மொச்சைக்கொட்டை சுண்டல் ரெடி!

Loading...

A1787_05
தேவையானபொருட்கள்
மொச்சைக் கொட்டை – 2 கப்
தேங்காய் துருவல் – 5 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வறுத்து பொடி செய்ய:
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறு துண்டு
தனியா – 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 4
தாளிக்க:
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை

செய்முறை
மொச்சைக்கொட்டையை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும்.

வறுக்கக் கொடுத்துள்ள சாமான்களை எண்ணெயில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.

அதில் வெந்த மொச்சைக்கொட்டையைப் போட்டு கிளறவும். அதில் பொடியைப் போட்டு, தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.

நன்கு கிளறி இறக்கவும்.

Loading...

728

2