new BB1

சுவையான வாழை ப்ரெட் டிலைட் ரெடி!

Loading...

A1745_06
தேவையானபொருட்கள்
வாழைக்காய் – ஒன்று
ப்ரெட் – 2
சோம்பு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 4
தேங்காய் துருவல் – கால் கப்
பூண்டு – 8
இஞ்சி – அரை அங்குலத் துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை
ப்ரெட் ஸ்லைஸை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காயை தோல் சீவி விட்டு இரண்டாக வகுந்து அதை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறுத் துண்டாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் வாழைக்காயை போட்டு கால் தேக்கரண்டி உப்பு, மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, சோம்பு, தேங்காய் துருவல், முக்கால் தேக்கரண்டி உப்பு போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ப்ரெட் மற்றும் வேக வைத்த வாழைக்காயை தனித்தனியாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் பொரித்த ப்ரெட் மற்றும் வாழைக்காயை போட்டு அரைத்த விழுதை அதனுடன் போட்டு ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு இறக்கி விடவும். மேலே கறிவேப்பிலை தூவவும்.

சுவையான புதுமையான வாழைக்காய் ப்ரெட் டிலைட் ரெடி

Loading...

728

2