new BB1

சுவையான வெள்ளை கோழி குருமா ரெடி!

Loading...

A12852_09
தேவையானபொருட்கள்
கோழி – அரை கிலோ
வெங்காயம் – ஒன்று
தக்காளி – கால் கிலோ
பச்சைமிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
தனியா தூள் – ஒரு மேசைக்கரண்டி
தயிர் – 4 மேசைக்கரண்டி
தேங்காய் – கால் மூடி
பாதாம் பருப்பு (அல்லது) முந்திரி – 7
எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
மல்லித்தழை, புதினா – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பொடிக்க :
வெள்ளை மிளகு – அரை தேக்கரண்டி
மிளகு – கால் தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
சோம்பு – அரை தேக்கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு – தலா 2

செய்முறை
கோழித் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

பொடிக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

பாதாம் பருப்பை, தேங்காயுடன் சேர்த்து அரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின்னர் அதனுடன் தாக்காளி, மல்லித் தழை, புதினா சேர்த்து வதக்கவும்.

அதனுடன் கோழித் துண்டுகள், மிளகாய்த் தூள், தனியா தூள், பொடித்த தூள் சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் தயிர், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு 8 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து வேக விடவும்.

பிறகு அதில் அரைத்த பாதாம் தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

சுவையான வெள்ளை கோழி குருமா ரெடி.

Loading...

728

2