new BB1

சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட் ரெடி!

Loading...

A1765_07
தேஎவையானபொருட்கள்
முட்டை – 10
உருளை – 4 (Medium Size)
வெங்காயம் – 2 (பெரிது)
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் / வெண்ணெய் – 5 மேசைக்கரண்டி

செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். உருளையை சிப்ஸ்க்கு சீவுவது போல் ஆனால் சற்று தடிப்பாக (ரொம்ப தடிப்பாவும் கூடாது) சீவி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் / வெண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், உருளை சேர்த்து நன்றாக வேக வதக்கி எடுக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் முட்டைகளை ஊற்றி அதில் மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடிக்கவும்.

இத்துடன் வதக்கிய உருளை, வெங்காயம் சேர்த்து கலந்து விடவும்.

நாண் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கலவையை ஊற்றி மூடி வேக விடவும்.

கீழ் பக்கம் சிவந்ததும் ஒரு தட்டில் மூடி கவிழ்த்து எடுக்கவும். அதை அப்படியே தவாவில் மேல் பக்கம் கீழே போவது போல் விட்டு விடவும்.

இரண்டு பக்கமும் நன்றாக சிவந்ததும் எடுத்து துண்டுகள் போடலாம். உருளையை சிலர் எண்ணெயில் அப்படியே பொரித்து எடுப்பார்கள், ஆனால் அது தேவை இல்லை. இந்த அளவு எண்ணெயிலேயே நன்றாக வதங்கிவிடும்.

Loading...

728

2