new BB1

சொறி, சிரங்குகளை போக்கும் பொன்னாவிரை

எல்லா வகை  நிலங்களிலும் வளரக் கூடிய சிறு செடி இது. சுமார் 3 அடி   உயரம் கூட வளரக்கூடியது. இதன் இலைகள் கூரான முனையுடையவை. வெளுத்த பச்சை நிறமாக இருக்கும்.

இதன் பூக்கள் ஆவரம்பூப் போல் மஞ்சளாக இருக்கும். காய்கள் தட்டையாக நீண்டிருக்கும். காய்கள் காய்ந்த பின் கருப்பாக இருக்கும், வெடிக்கக் கூடியவை.

ae4115f9-74c4-47f9-bb5e-c5f52b6e86ef_S_secvpf

தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளரக் கூடியது.

பயன்கள் :

பொன்னாவிரை நுண் புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது. பொன்னாவிரை இலை,

இதன் இலையுடன் கீழாநெல்லி சமமாக சேர்த்து நெல்லிக்காயளவு காலை, மாலை, மோரில் கொள்ள மஞ்சட்காமாலை தீரும்.

பொன்னாவிரை வேர் 15 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 10 கிராம், அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி காலை, மாலை 100 மி.லி. வீதம் கொடுத்து வரப் பித்தம் தீரும்.

இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசி 1 மணி நேரம் கழித்துக் குளித்துத் தேங்காய் எண்ணெய் தடவச் சிரங்கு 3 நாளில் மறையும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும், குடல் புண் உள்ளவர்களுக்கும் இந்த      மருந்துகளைக் கொடுக்கக் கூடாது.

728