new BB1

சோனியா எக்ஸ்பீரியா இ4 ஸ்மார்ட்போன்!

Loading...

2008756சோனி நிறுவனம், இந்தியாவில், அதன் எக்ஸ்பீரியா வரிசையில் Xperia E4 dual ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து, மொபைல் உலகக் கருத்தரங்கு நடைபெறுவதற்கு முன்பே, அறிவிப்பு வெளியானது நினைவிருக்கலாம்.
இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இரண்டின் இயக்கத்திற்கும் அனைத்து வசதிகளையும் தனித்தனி அடையாளங்களுடன் செட் செய்திடலாம். இதன் 5 அங்குல திரை, 960 x 540 பிக்ஸெல்களுடன், qHD IPS டிஸ்பிளே கொண்டுள்ளது.
1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் MediaTek SoC ப்ராசசர் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட, 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் இயங்குகிறது. 2300 mAh திறன் கொண்ட பேட்டரி, 2 நாட்கள் தொடர்ந்து மின்சக்தியை தேக்கித் தருகிறது.
இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4.4 கிட்கேட். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன.
இதன் பரிமாணம் 137 x 74.6 x 10.5 மிமீ; எடை 144 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, புளுடூத், வை பி, ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன. இந்த சோனி எக்ஸ்பீரியா இ4 மாடல் ஸ்மார்ட் போன் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.12,490 என்றாலும், கடைகளில் ரூ.12,190க்குக் கிடைக்கிறது.

Loading...

728

2