new BB1

டெங்கு வராமல் தடுக்க தடுப்பூசி இல்லை!

Loading...

Tamil_Daily_News_3257519006730டெங்கு நோய் பாதிப்பு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரப்பப்படுகிறது. தொடுவதின் மூலம் நேரடியாக பரவாது. பெரும்பாலும் கொசுக்களால் பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் உடலில் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் கொசுவிற்கு டெங்கு வைரஸ் செல்கிறது. அந்த வைரஸ் கொசுவை ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அது வேறு யாரையாவது ரத்தம் குடிக்க கடிக்கும்போது, கொசுவின் உமிழ்நீரிலிருந்து மற்றவருக்கு டெங்கு வைரஸ் பரவுகிறது.

டெங்குவை பரப்பும் கொசுக்கள் ஏடிசு எனும் கொசு வகையாகும். அதிகபட்சம் 21 நாள்கள் வாழும் இந்த கொசுக்கள் மனிதர்களுக்கு அருகிலுள்ள செயற்கை நீர் தேக்கங்களில் முட்டை இடுகிறது. உதாரணமாக பிளாஸ்டிக் தொட்டிகள், பிளாஸ்டிக் பைகள், தேங்காய் மூடிகள், பழைய டயர்கள் ஆகியவற்றில் இவை முட்டையிடுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவருக்கு சராசரியாக 4 முதல் 7 நாட்கள் காய்ச்சல் இருக்கும். நோயின் தாக்கத்தை பொருத்து சாதாரண காய்ச்சல், கடும் காய்ச்சலாக மாறும். இதனுடன் மூட்டுவலி, தசைவலி, தலைவலி, தோல் தடித்து நமைச்சல் ஏற்படும்.

கண் பின் பகுதியில் வலி, நோய் கடுமையானால் ரத்தகுழாயில், பல் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும். வெள்ளை அணுக்களில் இந்த வைரசின் தாக்கம் அதிகமானால் வெள்ளை அணுக்கள் குறையும், பொதுவாக ரத்த வகை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த ஓட்டம் பாதிக்கும். நோயின் தாக்கத்தால் பல்வேறு உறுப்புகள் பாதிக்கும். டெங்குவால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனை கண்காணிப்பில் நல்ல ஓய்வு, நீர்த்த உணவு, காய்ச்சலை கட்டுப்படுத்தும் மருந்து, மாத்திரை அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை தனிப்பட்ட மருந்து கண்டறியப்படவில்லை. எனினும் இந்நோய் பெரும்பாலும் 2 வாரங்களில் குணமாகிவிடுகிறது.

டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை பரிசோதித்து, ரத்த வகை அணுக்களின் எண்ணிக்கை அளவு கண்டறிந்து, அதை ஈடுகட்டவும், அதிகரிக்கவும், குறையாமல் பாதுகாக்கவும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிறுநீர் பரிசோதனை மேற்கொண்டு, சிறுநீருடன் ரத்தக்கசிவு உள்ளதா என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். எக்ஸ்ரே பரிசோதனை மூலம் டெங்குவால் நுரையீரலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய வேண்டும்.

டெ ங்கு காய்ச் சலுக்கு தடுப்பூசி இல்லை. டெங்கு நோயை பரப்பும் கொசுவில் இருந்து பாதுகாத்து கொள்வதே முக்கியமான தடுப்பு முறையாகும். ஏடிசு கொசு உருவாகாமல் தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும், நீர் தேங்காமல் பார்த்து கொண்டால் ஏடிசு கொசு இனப்பெருக்கம் ஏற்படுத்தாமல் கட்டுப்படுத்த முடியும்.

Loading...

728

2