new BB1

தனது ஐபாட் உற்பத்தியை நிறுத்தும் திட்டத்தில் ஆப்பிள் நிறுவனம்..

Loading...

ஆப்பிள் தொழில்நுட்பத்தின் முதல் ஐபாட் 14 வருடங்களுக்கு முன் 2001ம் ஆண்டு அக்டோபர் 23-ல் வெளியிடப்பட்டது. தன்னுடைய எல்லா தயாரிப்புகளையும் அப்டேட் செய்யும் ஆப்பிள், ஐபாட்டை அப்டேட் செய்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தில் பாடல் கேட்க மட்டும் ஒரு தனி டிவைஸ் அவசியமா என்ன? அதனால்தான், கடந்த சில வருடங்களாகவே ஐபாட் விற்பனை குறைந்துகொண்டே வருகிறது.

15844

அந்த வகையில், ஆப்பிள் இணையதளத்தின் முகப்பு பகுதியில் ஐபாட் என்ற பொத்தானுக்கு பதிலாக மியூசிக் என பொத்தான் மாறி இருப்பது ஐபாட்டின் ஆயுள் முடிய போகிறது என்பதை உணர்த்துகிறது.

இது முதன்முதலில் விற்பனைக்கு வரும்போது ஆப்பிளின் அப்போதைய தலைமைச் செயல் அதிகாரியான ஸ்டீவ், ஐபாட்டை தொழில்நுட்பத்தின் திருப்புமுனை என அறிமுகப்படுத்தினார்.

2001-ல் ஐபாட் 5GB கொள்ளளவுடன் வெளியானது. 1000 பாடல்களை சட்டைப் பைக்குள் அடக்கியது இதன் சாதனையாகும்.

ஒரு சராசரி மனிதனுக்குப் பிடித்த அத்தனை பாடல்களும் இந்த சின்ன பெட்டிக்குள் அடங்கும். தற்போதைய மிகச்சிறிய ஐபாட் 16GB கொள்ளளவுடன் வருகிறது.

2007ஐ ஐபாட்டின் ஆண்டாக கருதலாம். ஆப்பிளின் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு ஐபாட் விற்பனையால் வந்ததாகும்.

ஆப்பிளின் சமிபத்திய ‘ஆப்பிள் வாட்ச்’ ஐபாட்டுக்கு பதிலாக அதன் இடத்தை பெற முயற்ச்சிப்பதாக ‘ஆப்பிள் இன்சைடர்’ என்னும் வெப்சைட் கருத்து தெரிவித்துள்ளது.

இதன் விலை தற்போது உயர்வாக இருந்தாலும் கொள்ளளவு வருங்காலத்தில் அதிகரிக்கப்படும் எனவும் விலை குறையும் எனவும் பரவலாக நம்பப்படுகிறது.

ஆப்பிள் தனது ஐபாட் உற்பத்தியை நிறுத்தலாம் என்று பரவலான தகவல் வெளியானபோதும் இதுபற்றி அந்நிறுவனம் எப்போது நிறுத்தப்படும் என்ற கருத்து எதையும் வெளியிடவில்லை.

Loading...

728

2