new BB1

தரமற்ற காலணிகளால் வரும் பித்த வெடிப்பு!

Loading...

b64db5e8-3c47-4c19-a746-5302bdda801d_S_secvpfபெண்கள், இளம் பெண்களுக்கு மட்டும் அல்லாது, ஆண்களுக்கும் பித்த வெடிப்பு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பாதங்களின் அழகு பொலிவு இழந்து விடுகிறது. செருப்பு அணியாமல் நடப்பது, அதிக ஈரம் உள்ள இடத்தில் வேலை செய்வது போன்ற காரணங்களாலும் பித்த வெடிப்பு ஏற்படலாம்.

இந்த பாதிப்பு இருந்தால் வெந்நீரில் உப்பு கலந்து பாதத்தை நன்கு தேய்த்து கழுவுவது நல்லது. பித்த வெடிப்புக்கு கைப்பக்குவ மருந்தாக மருதாணியுடன் ஒரு களிப்பாக்கை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பாதங்களில் வெடிப்பு உள்ள இடத்தில் பூசி வந்தால் குணம் கிடைக்கும். கிளிஞ்சல் மெழுகை தேவையான அளவு எடுத்து அதை ஆமணக்கு எண்ணெயில் கலந்து பாதங்களில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வெடிப்பு குணமாகி பாத வலியும் குறையும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

Loading...

728

2