new BB1

நீர்த்துளிகளால் இயங்கும் கம்ப்யூட்டர் உருவாக்கம்..

Loading...

நீர்த்துளிகளால் இயங்கும் கம்ப்யூட்டரை உருவாக்குவதற்கு தீவிரமாக தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பலகலைக்கழகத்தின் உயிர் பொறியியல் விஞ்ஞானியான மனு பிரகாஷ்.

15755

ஸ்டான்போர்டு பலகலைகழகத்தின் 2 மாணவர்களுடன் இணைந்து பிரகாஷ் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

இந்த புதிய கண்டுபிடிப்பில் காந்தப்புலத்தின் மூலமாக சிறிய நீர்த்துளிகள் குறிப்பிட்ட திசை மற்றும் தொலைவில் நகர்த்தப்படும்.

இப்படி சுழலும் காந்தப்புலம் ஒருமுறை தனது சுழற்சியை நிறைவு செய்தால் அது கணினியின் அடிப்படையான கணினி கடிகாரமாக மாறும்.

இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் ஒரு உயர் செயல் வேதியியல் மற்றும் உயிரியல் ஆய்வகப் பணிகளுக்கு உதவும் வகையில் கணினி வளர்ச்சி பெறும்.

நீர்த்துளிகள் சோதனைக் குழாயாக மாறி வேதியியல் சேர்மங்களை எடுத்துச் செல்லும்.

இந்த புதிய ஆய்வு முழுமை அடைந்தால் ஸ்மார்ட் போன் முதல் ஆகாய விமானம் வரை அனைத்தின் வேகமும் செயல்திறனும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Loading...

728

2