new BB1

பேஸ்புக் மெசேன்ஜரில் பயனர்கள் மேப்-உடன் கூடிய தங்கள் இடத்தை பகிரலாம்

Loading...

facebook-friends-google-MAP

மேப்-உடன் கூடிய தங்களது இடத்தை பகிர்வதற்கான புதிய அம்சத்தை பேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மெசேன்ஜர் ஆப்-ல் இருக்கும் தங்களது நண்பர்கள், குடும்பத்தினருடன் நீங்கள் இருக்கும் இடத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

ஏற்கனவே மெசேன்ஜர் தங்களது இடத்தை பகிர்வதற்கான அம்சத்தை வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே அதாவது மெசேன்ஜர் ஆப்-ல் உங்கள் மெசேஜ்-ஐ கிளிக் செய்தால் போதும் நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் நண்பர் அறியலாம்.

தற்போது இதை நீக்கி புதியதாக நீங்கள் இசை நிகழ்ச்சி, ரெஸ்டாரென்ட், மீட்டிங் நடைபெறும் இடம், போன்ற எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அதை உங்கள் மெசேஜில் பகிரலாம்.

பேஸ்புக் இந்த புதிய அம்சத்தின் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை எடுத்துக் கொள்ளாது. ஆனால் பயனர்கள் தங்காளாகவே தற்போது இருக்கும் இடத்தை நண்பர்களுக்கு அனுப்பலாம் அதனால் இது முந்தைய அம்சத்தை விட முற்றிலும் மாறுபட்டது.

Loading...

728

2