new BB1

பேஸ்புக் லைட்- மெதுவான நெட்வொர்க்கிலும் வேகமாக இயங்கும் புதிய ஆப்

Loading...

20015335

இன்று உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைதளம் பேஸ்புக். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அம்சங்களை நாளொரு வண்ணம் செயல்படுத்தி கொண்டிருக்கிறது பேஸ்புக்.

உலகின் மூலையில் உள்ள மக்கள் கூட பேஸ்புக்கை அதிவேகத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் பேஸ்புக் லைட்.

இதை பற்றி நிறுவனத்தின் அறிவிப்பில், “இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறாத நாடுகளில் நெட்வொர்க்கின் வேகம் மிக குறைவாக இருக்கிறது . இதனால் அப்பகுதி மக்கள் பேஸ்புக்கில் இருக்கும் பல முக்கிய அம்சங்களை பயன்படுத்த முடியாமல் போகிறது. அந்த பகுதியில் கிடைக்கப்பெறும் மெதுவான மொபைல் நெட்வொர்கில் கூட பேஸ்புக்கின் அணைத்து அம்சங்களையும் பேஸ்புக் லைட் மூலம் வேகமாக பயன்படுத்த முடியும்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

வெறும் 1 MB அளவு கொண்ட பேஸ்புக் லைட்டை, டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்வதற்கு ஒரு சில வினாடிகளே போதுமானது. இதன் Newsfeed, status updates, photos மற்றும் notifications போன்ற அனைத்து அம்சங்களும் பேஸ்புக்கை போலவே தான் இருக்கிறது.

2G நெட்வொர்க் மூலம் பேஸ்புக்கில் ஒரு படத்தை அப்லோட் மற்றும் டவுன்லோட் செய்ய எடுத்து கொள்ளும் நேரத்தை விட, பேஸ்புக் லைட் மிக மிக குறைவான நேரத்தில், மிக விரைவாக செயல்படும். மேலும் ஒரு நபருடன் சாட் செய்வது அல்லது குரூப் சாட் செய்வதும் மிக வேகவமாக இருக்கும்.

இப்பொழுது ஆசியாவின் ஒரு சில நாடுகளிலுள்ள பயனர்கள் மட்டும், இதை கூகுள் ப்ளே ஸ்டோரில்டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

இந்தியா மற்றும் பிற நாட்டு பயனர்கள், பேஸ்புக் லைட்டை இந்த லிங்க் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Loading...

728

2