new BB1

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ஆப்பிள் மியூசிக்”

apple_radioநடந்த ஆப்பிள் நிறுவனத்தின் WWDC (World Wide Development Conference)-ல் பல்வேறு புதிய வெளியீடுகளை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதில் ஒன்று அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிளின் மியூசிக் சேவை.

கடந்தாண்டு, Beats Electronics மற்றும் Beats Music- ஐ ஆப்பிள் தன்வசம் கையகபடுத்தியதை தொடர்ந்து இதை பற்றிய மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் இப்பொழுது முற்றிலும் மாறுபட்ட, இதுவரை கண்டிராத ஒரு புரட்சிகரமான சேவையாக ” ஆப்பிள் மியூசிக் ” வெளிவர இருக்கிறது.
இசை விரும்பிகள் மற்றும் இசை கலைஞர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த சேவை, அவர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தகமும் இல்லை.
இனி ஆப்பிள் மியூசிக்-ஐ பற்றி சற்று விவரமாக காணலாம்:
சிரத்தையுடன் வடிவமைக்கபட்ட இந்த, ஆப்பிள் மியூசிக் (Apple Music) , பீட்ஸ் 1(Beats1) மற்றும் ஆப்பிள் கனக்ட் ( Apple Connect) என மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.
1.ஆப்பிள் மியூசிக்
iTunes library-யில் ஏற்கனவே இருந்த 30 மில்லியனுக்கும் மேற்பட்ட iTunes பாடல்களுடன் புதிய பாடல்களையும் சேர்த்து தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பிற மியூசிக் சேவை போலில்லாமல், கலைஞர்கள் மற்றும் நிபுணர்களை கொண்டு சிறந்த பாடல்களை தேர்வு செய்து ப்ளேலிஸ்ட் (playlist )- ஆக வழங்கியிருப்பது, இதை பிறவற்றில் இருந்து தனித்து காட்டும்.
இது இசை பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான அம்சமாக இருக்க போகிறது. மேலும் பயனர்கள் தங்களது சொந்த ப்ளேலிஸ்ட்டையும், இதில் பகிர்ந்து கொள்ளலாம். iTunes பாடல்களை டவுன்லோட் செய்து ஆப்லைனில் கேட்டு கொள்ளும் வசதியும் இருக்கிறது.
2. பீட்ஸ் 1
இது 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஆப்பிளின் புதிய உலகளாவிய மியூசிக் ஸ்டேசன். இது லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் லண்டனிலிருந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நேரடியாக ஒலிபரப்பாக போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை, BBC சேனலின் சேன் லோவ் போன்ற பிரபலங்கள் தொகுத்து வழங்க இருக்கிறர்கள்.
அனைத்து வகையான கலைஞர்களின் இசை தொகுப்பு, இசை பற்றிய செய்திகள் மற்றும் கலைஞர்களின் பேட்டி ஆகியவற்றை மக்களுக்கு பிடித்த வகையில் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.
3. ஆப்பிள் கனக்ட்
ஆப்பிள் மியூசிக்கின் ஒரு அங்கமான இது, இசை பிரியர்களை இசை கலைஞர்களுடன் இணைக்கும் முயற்சி. இதில் இசை கலைஞர்கள் தங்கள் பாடல், லைவ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவர்களுக்குரிய பேஜ்ஜில்(page) பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் வளர்ந்து வரும் கலைஞர்கள் தங்கள் பாடல்கள், பாடல் வரிகள், இசை போன்றவற்றிற்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் மதிப்பை அறிந்து கொள்ள முடியும்.
அதனை இசை பிரியர்கள் கண்டு கழிப்பதுடன், தங்கள் கருத்துகளை கலைஞர்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ளவும் முடியும். அது மட்டுமல்ல, பயனர்களும் தாங்கள் சொந்தமாக இயற்றிய பாடல்களை இதில் பகிர்ந்து கொள்ள முடிவதால், அவர்களது திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
இது எப்படி செயல்பட போகிறது என்பதற்கு உதாரணம் பார்ப்போம்.
நமது இசையமைப்பாளர் அனிருத் எடுத்துக் கொள்வோம். அவர் தனது பெயரில் ஆப்பிள் மியுசிக்கில் ஒரு பக்கம் உருவாக்கி கொள்ளலாம். தான் இசையமைத்த பாடல்களை அவர் அங்கே பகிர்ந்து கொள்ளலாம். அவற்றை நாம் ஷேர் செய்யவோ, லைக் செய்யவோ நம்மால் முடியும். அவற்றை itunes வசதி மூலம் விற்றுக்கொள்ள முடியும்.
இப்படி எல்லா இசை கலைஞர்களையும் ஒன்றிணைத்து அவர்கள் படைப்புகளை ஆன்லைனில் தருவது ஆப்பிள் மியுசிக் வேலை.
பிற குறிப்பிடும்படியான சிறப்பம்சங்கள்:
(i) மியூசிக் வீடியோக்கள்
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மியூசிக் வீடியோக்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இதில் விளம்பரங்கள் ஏதும் ஒளிபரப்பாகாது என்பது கூடுதல் பலன்.
(ii) சிறி (Siri)
“சிறி” எனப்படும் ஆப்பிளின் குரலுதவி சாப்ட்வேர் இதில் இடம்பெற்றிருக்கிறது. இதற்கு முன் உள்ள பிற மியூசிக் சேவையில் ஒரு பாடலை குறித்த தகவல்களை பெற வேண்டுமானால், பாடலின் தலைப்பு அல்லது பாடியவர் பெயர் போன்றவற்றை டைப் செய்ய வேண்டும்.
“சிறி”-ன் உதவியால் நமது குரலின் மூலம் பாடல் தலைப்பு, பாடியவர் பெயர் போன்றவற்றை வாயால் சொல்வதன் மூலமோ அல்லது உங்கள் மொபைலில் அந்த பாடலை ஒலிக்க செய்வதன் மூலமோ அந்த பாடலை குறித்த அதிக தகவல்களை பெறலாம்.
(iii) பிற சாதனங்களிலும் “ஆப்பிள் மியூசிக்”
ஆப்பிள் மியூசிக் சேவையை ஐபோனில் மட்டுமல்லாமல் ஐபேட், ஐபாட், மற்றும் Mac வாயிலாகவும் கேட்டு மகிழலாம். விண்டோஸ் மற்றும் ஆன்ட்ராயிட் சாதனங்களிலும் ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்தலாம்.
“ஆப்பிள் மியூசிக்” வருகின்ற ஜூன் 30-ம் தேதி முதல் iOS பயனர்களுக்கு கிடைக்க பெறும்.ஆன்றாயிட் மற்றும் பிற சாதனங்களுக்கு இந்த சேவை கிடைக்கப்பெறும் நாள் குறித்த விவரம் இன்னும் வெளிவரவில்லை. எனினும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த சேவை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அதன் பிறகு ஒரு பயனருக்கு மாதத்திற்கு ரூ.638.61/- ($9.99) மற்றும் 6 பேர் கொண்ட குழு ஒரு ஆப்பிள் மியூசிக் அக்கௌன்ட்டை பகிர்ந்து கொள்ள மாதத்திற்கு ரூ.958.39/- ($14.99.). ஆப்பிள் மியூசிக்கின் அம்சங்கள் அசத்தும் வகையில் இருப்பதால், இந்த கட்டணம் இசை பிரியர்களை பெரிதாக பாதிக்க போவதில்லை என நம்பபடுகிறது.
மியூசிக் என்றாலே இலவசம் என்று ஆகி விட்ட இந்தியா போன்ற நாடுகளில் இது எந்த அளவு எடுபடும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

728