new BB1

முகத்திற்கு புதுப்பொலிவு தரும் நத்தை பேஷியல் சிகிச்சை!

Loading...

f5b19c1f-f8e1-4d86-a4be-e509d4fcc332_S_secvpf (1)அழகாக வேண்டுமென்பதற்காக பெண்கள் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கின்றார்கள். நத்தையைக் கண்டாலே அருவருத்து ஓடும் பெண்கள் இன்று தமது முக அழகுக்காக அவற்றை தமது முகங்களிலே ஊர விடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நத்தை பேஷியல் சிகிச்சையின் மூலம் முகத்தில் ஏற்கனவே காணப்படும் பருக்கள், முகச் சுருக்கம், கரும்புள்ளிகள் என்பவை நீங்கி முகம் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கின்றது. இந்த சிகிச்சை முறைக்கு 5 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. பெண்களின் முகத்தில் நத்தைகளை விட்டவுடன் கூச்சத்தில் தடுமாறும் பெண்கள் பின்னர் அதனது தொடுகையை பழக்கப்படுத்திக் கொண்டு விடுகின்றனர்.

பின்னர் உறங்கி விடுகின்றனர். தற்போது ஜப்பானில் இந்த சிகிச்சை முறை பெண்களிடம் வேகமாகப் பரவி வருகின்றது. நத்தைகள் முகத்தில் ஊர்ந்து போகும் போது அதிலிருந்து சுரக்கும் நீர் முகத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்குவதற்கு உதவுகின்றது. சூரிய ஒளியினால் முகத்தில் ஏற்படும் கருமையை அகற்றி வறண்ட முகத்திற்கு ஈரழிப்பைக் கொடுக்கின்றது.

நத்தையில் இருந்து சுரக்கும் நீரானது சருமத்தின் முதிர் தோற்றத்தைக் குறைக்க உதவுகின்றது. சந்தையில் காணப்படும் அநேகமான அழகு சாதனப் பொருட்களில் நத்தையில் இருந்து சுரக்கும் நீர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறை ஆரம்பிப்பதற்கு முன்பாக முகத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

எப்போதும் கன்னம் மற்றும் நெற்றிப் பகுதிகளிலேயே பிரதானமாக வைக்கப்பட்டு நத்தை ஊர்ந்து செல்ல விடப்படும். பின்பு அவை முகத்தைச் சுற்றி ஊர்ந்து செல்லும். இந்த நத்தை சிகிச்சையானது நம்மை ஓய்வாகவும் வைத்துக் கொள்கிறது. ஏனெனில் நத்தைகள் முகத்தில் ஊர்ந்து செல்லும்போது நாம் இயல்பாகவே நித்திரையில் ஆழ்ந்து விடுவோம்.

Loading...

728

2