new BB1

முகப்பருவில் இருந்து வரும் இரத்தக்கசிவை தடுக்கும் வழிகள்!

Loading...

063869b2-3f05-4b44-9f9e-7329cd426279_S_secvpfபருக்கள் முகத்தில் வந்தால், அது அழகை கெடுப்பதோடு அரிப்பையும், இரத்தக்கசிவையும் ஏற்படுத்தி, எரிச்சலைத் தரும். பருக்களில் இருந்து இரத்தக்கசிவு ஏற்பட்டால், அதற்கு காரணம் சருமத்துளைகளில் கடுமையாக நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். ஆகவே கைகளால் பருக்களை தொடுவதை முதலில் நிறுத்துங்கள். பருக்களில் இருந்து இரத்த கசிவு வருவதை தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

• தினமும் முகத்தை பலமுறை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். முக்கியமாக அப்படி கழுவும் போது, எந்த ஒரு கெமிக்கல் கலந்த பொருட்களான சோப்பு, கிளின்சர், ஃபேஸ் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை பருக்களின் நிலையை இன்னும் மோசமாக்கிவிடும்.

• உண்ணும் உணவிற்கும், பருக்களில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதற்கும் தொடர்புள்ளது. ஆகவே சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் உட்கொண்டு வாருங்கள். அதிலும் வைட்டமின் ஏ, நியாசின், வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாடம் எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

• பருக்களில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுக்க சிறந்த வழி, அவற்றை தொடாமல் இருப்பது தான். ஏனெனில் கைகளால் பருக்களைத் தொடும் போது, கைகளில் உள்ள பாக்டீரியாக்கள் பருக்களில் நுழைந்து, நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.

• வைட்டமின் பி மாத்திரைகளை எடுப்பதன் மூலமும் பருக்களில் இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வைட்டமின் பி மாத்திரைகள் பருக்களை விரைவில் குணப்படுத்தவும் செய்யும்.

• பருக்களில் அதிகளவு இரத்தக்கசிவு இருந்தால், ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைப்பதோடு, இரத்தக்கசிவும் உடனே நின்றுவிடும்.

Loading...

728

2