new BB1

மைக்ரோசாப்ட்டின் ஆன்லைன் ஸ்டோரை ஸ்நாப்டீலில் துவங்கியுள்ளது!

Loading...

microsoft-brand-store-snapdealமைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய ஆன்லைன் ஸ்டோரை ஸ்நாப்டீலில் துவங்கி உள்ளது. இது இந்தியாவில் மைக்ரோசாப்டின் பிரத்தியேகமான இரண்டாவது ஆன்லைன் ஸ்டோர். இதற்கு முன் அமேசான் இந்தியாவில் தனது ஸ்டோரை கடந்த வருடம் தொடங்கியது.

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதனால் தான் சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆன்லைன் விற்பனையை பின்பற்றுகின்றனர். அதே போல் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்தியன் மார்கெட்டில் ஆன்லைன் விற்பனையை அதிகப்படுத்த கவனம் செலுத்தவுள்ளது.
இந்த புதிய ஆன்லைன் ஸ்டோர் மூலம் மைக்ரோசாப்ட் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்யவுள்ளது. சாப்ட்வேர் மற்றும் பிற தயாரிப்புகளை, சலுகையுடன் வழங்க திட்டமிட்டிருக்கிறது.
சில தயரிப்புகள் அவுட் ஆப் ஸ்டாக்கில் இருந்தாலும் கூடிய விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ஸ்மார்ட்போன், டேப்லட் மற்றும் சாப்ட்வேர் உட்பட மைக்ரோசாப்டின் அனைத்து தயாரிப்புகளும் கிடைக்கும்.
இந்த மைக்ரோசாப்ட் தயாரிப்புகளை வாங்க ஆர்வமாக இருக்கிறீர்களா? உடனே இந்த புதிய மைக்ரோசாப்ட் ஸ்டோர் சென்று தள்ளுபடியில் கிடைக்கும் மைக்ரோசாப்ட் தயாரிப்புகளை பாருங்கள். சலுகைகளுடன் கிடைக்கும் இந்த தயாரிப்புகள், பயனருக்கு உபயோகமானதாக இருக்கும்.

Loading...

728

2