new BB1

ரத்தத்தில் சர்க்கரையின் முறையான அளவு என்ன?

Loading...

f13d0cd5-fd48-4967-8d6f-2788313c214a_S_secvpfரத்தத்தில் சர்க்கரையின் அளவு என்பது மிகு/ டெசிலி என்ற முறையில் குறிப்பிடப்படுகின்றது. பல நாடுகளில் எம்.எம்ஆர்./ லி என்ற முறையிலும், குறிப்பிடப்படுகின்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிமிடத்திற்கு நிமிடம் கூட மாறுபடும்.

சாப்பிட்ட உடன் அதிகம் கூடும். உடற்பயிற்சிக்குப் பின்பு பொதுவில் நன்கு தெரியும். மருத்துவர்கள் இரவு உணவுக்குப்பின் சுமார் 8 மணி நேர உணவின்மை இடைவெளியில் எடுக்கும் காலை பரிசோதனையும், உணவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு எடுக்கும் பரிசோதனையையும் முக்கியமாக கொள்கின்றனர்.

காலை பரிசோதனையில் காலையில் எதுவும் சாப்பிடும் முன்பு எடுக்கப்படும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 70-92 மிகி/டெசிலி என்பது மிக மிக சிறப்பானது. அனேக மருத்துவர்கள் 100 மிகி/டெசிலி சரியானதே என்று ஏற்றுக் கொள்கின்றனர். சாப்பிட்டு 1-2 மணி நேரத்திற்கும் பிறகு 120 மிகி/டெசிலி என்பதும் மிக சிறப்பானது. எப்பொழுதும் 70 மிகி/டெசிலி கீழ் என்ற அளவு சரியானது அல்ல.

Loading...

728

2