new BB1

ரத்த சோகையை நீக்கும் நூல்கோல்!

Loading...

d0250779-ef81-48aa-be8a-0fd5c8472926_S_secvpfநூக்கல் என்று அழைக்கப்படும் இந்தக் காய் வெள்ளை கலந்த பச்சை நிறத்தில் உருண்டையாக இருக்கும். இது குளிர்பிரதேசத்தில் வளரக் கூடிய ஒருவகை காயாகும். இதில் உயிர்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்பும் நிறைந்துள்ளது.

இதில் வெஜிடபிள் சூப் செய்யவும், வெஜிடபிள் பிரியாணி செய்யவும் பெருமளவு இந்த காயை பயன்படுத்துவர். நூக்கல் சற்று கடினமான காயாகும். எனவே நன்கு வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதனை நூற்கோல் என்றும் அழைப்பதுண்டு. இதில் வைட்டமின்களும் புரதசத்தும் நிறைந்துள்ளது. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும்.

முற்றிய நூக்கலை வாங்குவதை விட பிஞ்சு நூக்கலை வாங்குவதே சிறந்தது.ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் நூக்கோலைச் சாப்பிட்டு வரலாம்.

இதில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. நூக்கோல் ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும். குழந்தை பெற்ற பெண்கள் இந்த பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இது வயிற்று கோளாறுகளை நீக்கும் தன்மைக் கொண்டது. ஜீரண சக்தியை ஏற்படுத்தும், நரம்புகளை வலுப்படுத்தும், குடல் நாளங்களை உறுதிப்படுத்தும். எலும்புகளை உறுதியாக்கும்.

நூல்கோலில் உள்ள சத்துக்கள் :

100கி நூல்கோலில் வைட்டமின் சி 75% உள்ளது. கார்போஹைட்ரேட் 6.2கி, புரதம் 1.7கி, நார்ச்சத்து 4.3கி,சர்க்கரை 2.6கி, கொழுப்பு 0.1கி போன்ற அத்தியாவசிய சத்துக்களும், வைட்டமின் இ, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற உயிர்ச்சத்துக்களும் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், மாங்கனீஸ் போன்ற தனிம சத்துக்களும் உள்ளன.

Loading...

728

2