new BB1

லாப்டப் பேட்ரி சட்டுனு தீர்ந்துடுதா, அப்ப இதை படிங்க!

Loading...

16586முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது உங்களின் லாப்டாப் சார்ஜ் தீரும் நிலையில் இருக்கின்றதா. லாப்டாப் சார்ஜரும் கையில் இல்லையா, உடனே மனம் தளராமல் மீதம் இருக்கும் நேரத்தில் முடிந்த வரை மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க முடியும். இது போன்ற சம்பவங்களில் சிறிது நேரத்திற்கு லாப்டாப் பேட்ரியை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

பேட்ரி சேவர் மோட்
பேட்ரி தீரும் நிலையில் லாப்டாப் பேட்ரி சேவர் மோடு ஆன் செய்தால் சிறிது நேரத்திற்கு பேட்ரி தாங்கும்.
டிவைசஸ்
முடிந்த வரை வை-பை, ப்ளூடூத் ரேடியோ, கிராபிக்ஸ் பிராசஸர் போன்ற அம்சங்களை ஆஃப் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கப் சற்று நேரத்திற்கு அதிகரிக்கும்.
செட்டிங்ஸ்
வெளிச்சம் அதிகமாக இருக்கும் இடங்களில் லாப்டாப் கீபோர்டு பேக்லைட்டிங்’ஐ ஆஃப் செய்யலாம்.
ஆப்ஸ்
ஹார்டுவேர் மட்டுமின்றி அப்ளிகேஷன்களும் பேட்டரியை பயன்படுத்தும், இதனால் பயன்படுத்தாத ஆப்ஸ்களை ஆஃப் செய்து வைக்கலாம்.
பேட்ரி
நீண்ட நாள் பேட்டரியை பயன்படுத்த அவைகளை சீராக பராமரிக்க வேண்டும். எப்பவும் பேட்டரியை சார்ஜரில் வைக்க கூடாது. லாப்டாப் பேட்டரிகளை சூடான இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
பேட்ரி பேக்கப்
மிகவும் எளிமையான விஷயம் என்னவென்றால் கையில் எப்பவும் கூடுதல் பேட்டரியை வைத்து கொள்ளலாம்.

Loading...

728

2