new BB1

வயதை குறைத்துக் காட்ட வழி இருக்கு!

Loading...

ht3488ஒவ்வொரு வைட்டமினுக்கும் சில சிறப்பு குணங்கள் உள்ளன. ஆன்டி ஏஜிங் காரணியாக செயல்படும் காரணத்தால் பெண்களிடையே பெருமவுசு பெற்று வரும் வைட்டமின் இயின் சிறப்புகளை இங்கே பார்ப்போம்…

வைட்டமின் இ கொழுப்பில் கரையக்கூடியது. இது சிறந்த ஆன்டிஆக்சிடன்டாக செயல்பட்டு சருமத்தில் சுருக்கத்தை வரவைக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸ் காரணிகளை தடுக்கிறது. வைட்டமின் இ சத்து போதுமான அளவு உள்ளவர்களின் சருமம் சுருக்கம் ஏற்படாமல் பொலிவாக காணப்படும். வைட்டமின் இ உடலில் சுரக்கும் என்சைம்களை ஊக்குவிக்கிறது. ஜீன்களின் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு களின் செயல்பாடுகளிலும் இதன் பங்கு முக்கியமானது. செல்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்துக்கும், வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது.

புரோட்டின் கைனேஸ் என்னும் என்சைமை சரியான முறையில் சுரக்கச் செய்து மிருதுவான தசைகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. காயங்களின் போது ஏற்படும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி ரத்தத்தை எளிதில் உறையவைக்கிறது. புண்களை விரைவில் ஆற்றும் செயலைச் செய்கிறது. திசுக்களில் ஏற்படும் சேதாரத்தைத் தடுத்து, புதிய செல்கள் உருவாக உதவுகிறது. நல்ல கொழுப்புகளை உடலில் தங்கவைக்கிறது. உடலுக்கு நன்மை செய்யும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களை ஆக்சிடேசன் ஆகாமல் தடுக்கிறது.

வைட்டமின் இ குறைந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி குறையும். நரம்பியல் சார்ந்த நோய்கள் வரும். ரத்தம் உறையும் தன்மையும் குறையும். சருமப் பிரச்னைகள் அதிகரிக்கும். முதுமை நோய்கள் அதிகரிக்கும்.இக்குறைபாட்டை சரிசெய்ய மாத்திரைகளைவிட இயற்கையாக உணவுப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வைட்டமின் இதான் சிறந்தது. கோதுமையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் பருப்பு மற்றும் எண்ணெய், ஹேசல்நட், கிரீன் டீ, பசலைக்கீரை, பீட்ரூட் இலைகள், டர்னிப் இலைகள், பப்பாளி, மாம்பழம், தக்காளி, வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் அவகடோ போன்றவற்றில் வைட்டமின் இ இருப்பதால் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Loading...

728

2