new BB1

வாய் துர்நாற்றம் தவிர்ப்பது எப்படி?

Loading...

رائحة-الفم-615x410வாய் துர்நாற்றம் என்பது பேசுபவர்களுக்கு தெரியாது. எதிரில் இருப்பவர் மூக்கை மூடும்போது தான் பேசுபவருக்கு தெரியவரும். வாய் துர்நாற்றத்திற்கு, சரியாக பல் விலக்காதது. சொத்தை பற்கள், புகை பிடித்தல், குடிப்பது, புகையிலை பொருட்கள் மெல்லுவது, வெற்றிலை பாக்கு, பான்பராக் பழக்கங்கள், இரவில் நீண்ட நேரம் கண்விழித்திருப்பது, வாய் உலர்ந்து போவது, காலையில் பல் துலக்காமல் டீ, காபி குடிப்பது, பல்செட்டை முறையாக பராமரிக்காதது. சில நோய்களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். சுவாசக்குழாய் பாதிப்பு, நிமோனியா, ப்ராங்கைட்டிஸ் சர்க்கரை நோய், ஈறு நோய், குடல் நோய் மற்றும் சிறுநீரக கோளாறுகளும் காரணமாக இருக்கக்கூடும்.

வாய் துர்நாற்றத்தை தடுக்க, காலை, மாலை 2 வேளையும் நன்றாக பல் துலக்க வேண்டும். சாப்பிட்ட பின்னர் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். மவுத் வாஷ், உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம். ஆயில் புல்லிங் செய்யலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். புகை பிடிப்பது மற்றும் புகையிலை பொருட்களை தவிர்க்க வேண்டும். இரவில் நீண்ட நேரம் விழிக்கக்கூடாது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சில பற்கள் அல்லது முழுவதும் பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயை கொப்பளிக்க வேண்டும்.

இரவில் தூங்கும்போது பல்செட்டை கழற்றி தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக்கூடிய கிருமி நாசினியை உபயோகித்து 2 வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும். வாய் உலர்ந்தவர்கள் அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள கிருமிகளை அகற்றலாம். இரவு நேரங்களில் அதிகமாக பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சொத்தை பற்கள் இருந்தால் உடனடியாக அடைத்து கொள்ள வேண்டும்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை பார்க்க வேண்டும். பிரஷ் செய்த பின்னர் அதை கேப் போட்டு மூடி வைப்பது தவறு.ஈரம் இருக்கும் இடங்களில் தான் வைரசுகள் பெருகக்கூடும். அதே நேரம் டூத் பிரஷ்களை பாக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் குளியலறையில் வைப்பதும் தவறு. அடுத்த முறை பிரஷ் செய்யும்போது நன்றாக பிரஷ்ஷை தண்ணீரில் கழுவி விட்டு பயன்படுத்த வேண்டும் என்கின்றனர்.

Loading...

728

2