new BB1

விண்டோஸ் 10 ஐ இலவசமாக வழங்கவுள்ள மைக்றோசொப்ட்!

Loading...

8119தனது பயனாளர்கள் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக வழங்குவதற்கு மைக்றோசொவ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மைக்ரோசொப்ட் இயங்குதளத்தின் இயக்குநர் டேர்ரி மைர்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி விண்டோஸ் 10 மாதிரி பதிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது விண்டோஸ் 7 அல்லது 8 ஐ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும், விண்டோஸ் 10 ஐ இலவசமாக வழங்க மைக்றோசொப்ட் முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் அனுமதியின்றி விண்டோசை பயன்படுத்துபவர்களுக்கும் இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் கணனி மற்றும் கைத்தொலைபேசிகளுக்கான இந்த இயங்குதளத்தின் மாதிரி தோற்ற காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் 7 மற்றும் 8 போன்றன பெரும்பாலும், பணம் செலுத்தாமல் திருட்டு மென்பொருட்களாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

728

2