new BB1

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை தரும் குளியல்கள்!

Loading...

a3377e29-e641-414d-8624-00001c5dde43_S_secvpfகோடையில் உடலில் சருமமும் வறட்சியால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். தினமும் இரண்டு முறை குளிப்பது ஒன்றே, வறட்சியைப் போக்கும் வழி. கோடையை சமாளிப்பதற்கான ஆரோக்கியமான சிலவகைக் குளியல் முறைகளை பார்க்கலாம். ஐஸ்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் குளிப்பதோ, அதிக சூடான நீரில் குளிப்பதோ கூடாது. வெதுவெதுப்பான நீரே குளியலுக்கு ஏற்றது. ப்யூமிக் ஸ்டோன், நார் பயன்படுத்திக் குளித்தால், சரும அழுக்கை எளிதில் அகற்றலாம்.

எண்ணெய் குளியல் :

குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு, உடல் முழுவதும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைத் தடவி, நன்றாக ஊறவைக்க வேண்டும். பிறகு, சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வீட்டிலேயே சீயக்காய் தயாரித்து, தேய்த்துக் குளிப்பதன் மூலம், சரும நோய்கள், முடி வளர்ச்சி, பேன் பொடுகு நீங்கும். நரை முடியைத் தடுக்கும்.

அருகம்புல் குளியல் :

நாட்டு மருந்துக் கடைகளில் அருகம் புல் தைலம் கிடைக்கும். வீட்டிலேயே தயாரிக்க, அருகம்புல் சாறு 100 கிராம், தேங்காய் எண்ணெய் 200 கிராம், அதிமதுரம் 10 கிராம் சேர்த்து, நன்றாக நீர் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்தத் தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து, 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இதனால், பூஞ்சைத் தொற்றுப் பிரச்சனை சரியாகும். சருமம் பளபளப்பையும் மிருதுத் தன்மையையும் பெறும்.

உப்புக் குளியல் :

உடல் சோர்வு, வலி, அதிக நீரிழப்பு இருந்தால், உப்புக் குளியல் உடனடி தீர்வைத் தரும். கடைகளில் கிடைக்கும் எப்சம் உப்பு, சாதாரண உப்பு, பேக்கிங் சோடா மூன்றையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து அந்த நீரில் குளிக்கலாம். சருமத்தில் உள்ள அழுக்கை நீங்கி, உடலை சுத்தமாகும். கடைசியாக, எலுமிச்சைச் சாற்றைத் தண்ணீரில் கலந்து, தலையில் விட்டுக்கொள்ளலாம்.

களிமண் குளியல் :

நாட்டு மருந்துக் கடைகளில் குளியலுக்கான களி மண் கிடைக்கும். அதை வாங்கி, தண்ணீர் சேர்த்து, உடலில் பூசி, குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்த பிறகு குளிக்கலாம். இதனால், ரத்த ஓட்டம் சீராகும். செல்கள் புதுப்பிக்கப்படும்.

Loading...

728

2