new BB1

ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக்கும் வழிகள்!

Loading...

5ed3faf2-13db-4428-b8fe-7ae2ebf2f39e_S_secvpf• 1 முட்டையை உடைத்து அதை நன்கு அடித்து கூந்தல் முழுவதும் பூசி 40 நிமிடங்கள் கழித்து, கூந்தலை அலசவும். முட்டையில் புரதமும் கொழுப்பும் நிறைந்துள்ளதால், கூந்தலுக்குச் சிறந்த ஹேர் பேக்காக அமையும்

• ஒரு பவுளில் ஆப்பிள் சிடர் வினிகரை ஊற்றிக் கொள்ளுங்கள், பஞ்சால் வினிகரை தொட்டு ஸ்கால்பிலும் கூந்தலிலும் பூசி, பின் 10 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசுங்கள்.

• ஆலிவ் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், ஆமணக்கு எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மூலிகை எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை சூடு செய்து, ஸ்கால்ப்பில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.

ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக்கும் வழிகள் :

• 10 விரல்களின் நுனியால் மண்டையை மிதமான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்திடுங்கள். மசாஜ் செய்யும்போது, முன்னந்தலையிலிருந்து பின்னந்தலை வரை மசாஜ் செய்யவும்.

• ப்ளாஸ்டிக் சீப், நகங்கள் ஆகியவை ஸ்கால்ப்பை சேதப்படுத்தும். மர சீப்பால் கூந்தலை அழுத்தி வார, ரத்த ஒட்டம் சீராகப் பாயும்

• டீ ட்ரீ எண்ணெயை (Tea Tree oil) ஸ்கால்ப்பில் பூசி மசாஜ் செய்யலாம்

• தலையணையின் உறை சாட்டின் (satin) துணி வகையாக இருக்கலாம். அதுபோல கூந்தலைப் போர்த்தும் ஸ்கார்ப் (Scarf) சாட்டினாக இருப்பது நல்லது. ஏனெனில் மற்ற துணி வகைகள் கூந்தலில் இருக்கும் ஈரத்தன்மையை உறிஞ்சிவிடும்.

• 5 நிமிடங்களுக்கு மேல் கூந்தலை ஹீட்டரால் காயவைக்கக்கூடாது. அவசர அவசரமாக கூந்தலை வாரி, சிக்கு எடுக்கக் கூடாது.

• ஸ்கால்ப் ஈரமாக இருக்கையில் கூந்தலை சீப்பால் வாருவது தவறு. முள்ளங்கி, சோயா பீன்ஸ், புரோகோலி, ஃப்ளாக்ஸ் விதைகள் ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம். ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகள் வராது.

Loading...

728

2